இந்தியா

டீ கடையாக மாறிய Audi கார்.. தினமும் டீ விற்று வரும் 2 இளைஞர்கள்: எங்குத் தெரியுமா?

மும்பையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் Audi காரில் டீ விற்பனை செய்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டீ கடையாக மாறிய Audi கார்.. தினமும் டீ விற்று வரும் 2 இளைஞர்கள்: எங்குத் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மிகவும் விலை உயர்ந்த மற்றும் சொகுசு கார்களில் ஒன்றாக Audi கார் கருதப்படுகிறது. இந்நிலையில் Audi காரில் இரண்டு இளைஞர்கள் டீ விற்பனை செய்து வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர்கள் மன்னு சர்மா மற்றும் அதித் காஷ்யப். இந்த இரண்டு இளைஞர்களும் சேர்ந்து Audi காரில் லோகந்த்வாலா சாலையின் ஓரத்தில் தினமும் டீ விற்பனை செய்து வருகின்றனர். இவர்களின் டீ விற்பனை வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

டீ கடையாக மாறிய Audi கார்.. தினமும் டீ விற்று வரும் 2 இளைஞர்கள்: எங்குத் தெரியுமா?

இந்த வீடியோவை பார்த்த பலரும் இளைஞர்கள் இரண்டு பேருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். "எந்த வணிகமும் ஒரு சிறு வணிகம் அல்ல, கடின உழைப்பை மதிக்கவும். வாழ்த்துக்கள் சகோதரரே" என ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.

மற்றொரு பயனர் 'இது ஒரு சாத்தியமான வணிகம் அல்ல' என்றும், "அவரால் Audi கார் வாங்கமுடிந்தாலும் இன்னும் டீ விற்க வேண்டும் என்றால் அவர் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் புகழ் மட்டுமே விரும்புவோர் அல்லது கல்வியில் ஏதேனும் தவறு உள்ளது" என மற்றொரு பயனர் விமர்சனம் செய்துள்ளார். இப்படி Audi காரில் டீ விற்பனை செய்து வரும் இளைஞர்களுக்கு ஒரு புறம் பாராட்டும் மற்றொரு புறம் விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories