இந்தியா

“மதவாத அரசியலுக்கு எதிராக..” : பாஜகவை ஆட்டம் காண வைத்த ஒற்றை ட்வீட் - முதல் ஆளாக வாக்களித்த பிரகாஷ் ராஜ்!

“வகுப்புவாத அரசியலுக்கு எதிராக.. 40% ஊழல் சர்க்காருக்கு எதிராக நான் வாக்களித்துள்ளேன்; உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள்” என நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“மதவாத அரசியலுக்கு எதிராக..” : பாஜகவை ஆட்டம் காண வைத்த ஒற்றை ட்வீட் - முதல் ஆளாக வாக்களித்த பிரகாஷ் ராஜ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று முடிவடைந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 173 பொதுத்தொகுதிகள், 36 தனித் தொகுதிகள், 15 பழங்குடியினர் தொகுதிகள் என மொத்தம் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10 அன்று ஒரேகட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இத்தேர்தலில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இவர்களுக்காக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 282 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தலையொட்டி, மாநில போலிஸாருடன் துணை ராணுவப்படை, ஆயுதப்படை, எல்லை பாதுகாப்பு படை யைச் சேர்ந்த வீரர்களும் பாதுகாப்பு படைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மே 13 அன்று நடைபெறுகிறது.

“மதவாத அரசியலுக்கு எதிராக..” : பாஜகவை ஆட்டம் காண வைத்த ஒற்றை ட்வீட் - முதல் ஆளாக வாக்களித்த பிரகாஷ் ராஜ்!

பாஜக- 224, காங்கிரஸ்- 223, மஜத- 217 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளும் போட்டியில் இருந்தனர். ஆளும் பாஜக பணத்தை தண்ணீராக செலவிட்டது. தேர்தலையொட்டி பறக்கும் படையிடம் பிடிபட்ட ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களின் மதிப்பு மட்டும் ரூ.375 கோடியைத் தொட்டது.

இந்நிலையில் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகாலை முதலே வாக்களித்து வருகின்றனர்.

இதனையடுத்து பாஜகவின் மதவாத அரசியலுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று காலை அவரது தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வகுப்புவாத அரசியலுக்கு எதிராக.. 40% ஊழல் சர்க்காருக்கு எதிராக நான் வாக்களித்துள்ளேன்; உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள்.. அனைவரையும் உள்ளடக்கிய கர்நாடகாவுக்கு வாக்களியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories