இந்தியா

300 கி.மீ வேகம்.. இரண்டாக உடைந்த ஹெல்மெட்: சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல YouTuber!

அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றதால் ஏற்பட்ட விபத்தில் பிரபல யூடியூபர் அகஸ்தியா சவுகான் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

300 கி.மீ வேகம்.. இரண்டாக உடைந்த ஹெல்மெட்: சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல YouTuber!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டைச் சேர்ந்த TTF வாசனைப் போன்று பலரும் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி அதை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். இப்படி அதிவேகமாக பைக் ஓட்டி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் அகஸ்தியா சவுகான்.

இவர் சூப்பர் பைக்குகளை அதிவேகமாக ஓட்டி அதைத் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இவரின் யூடியூப் பக்கத்தை 10 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்ந்து வருகின்றனர்.

300 கி.மீ வேகம்.. இரண்டாக உடைந்த ஹெல்மெட்: சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல YouTuber!
300 கி.மீ வேகம்.. இரண்டாக உடைந்த ஹெல்மெட்: சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல YouTuber!

இந்நிலையில் அகஸ்தியா சவுகான் தனது கவாசாகி பைக்கில் யமுனா விரைவு சாலைவழியாக டெல்லிக்கு சென்று கொண்டிருந்தார். இவர் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த தடுப்பு மீது பைக் மோதியுள்ளது.

இதில் தூக்கி வீசப்பட்ட இவர் பலத்த காயம் அடைந்துள்ளார். மேலும் அவரது ஹெல்மெட் இரண்டாக உடைந்துள்ளது. இந்த விபத்து பற்றி அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால் அங்குச் சிகிச்சை பலனின்றி அகஸ்தியா சவுகான் உயிரிழந்தார். இவர் உயிரிழந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories