இந்தியா

2 முறை கர்ப்பம்.. கருக்கலைப்பு.. இளம்பெண்ணை 2 ஆண்டுகளாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த உபி போலிஸ் !

2 போலீசார் சேர்ந்து ஒரு இளம்பெண்ணை 2 ஆண்டுகளாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 முறை கர்ப்பம்.. கருக்கலைப்பு.. இளம்பெண்ணை 2 ஆண்டுகளாக  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த உபி போலிஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஷாமிலி என்ற பகுதியில் 23 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு முகநூல் பக்கம் மூலமாக இம்ரான் மிஸ்ரா என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். அவரும் ஷாம்லியில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருவதால், இந்த இளம்பெண் அவருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

கோப்பு படம்
கோப்பு படம்

இந்த சூழலில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் அடிக்கடி நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். அந்த பெண்ணை ஹோட்டல் அறைக்கு வரவழைத்து இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். அதோடு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை நெருக்கமாக இருந்துள்ளார் போலீஸ் அதிகாரி இம்ரான்.

கோப்பு படம்
கோப்பு படம்

இவ்வாறாக அந்த பெண் நெருக்கமாக இருக்கும்போது இரண்டு முறை கர்ப்பமாகியுள்ளார். ஆனால் இம்ரானோ, அதனை கலைக்க சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதனால் அந்த பெண்ணும் கலைத்துள்ளார். கடந்த இப்படியே சில நாட்கள் தொடர, இந்த பெண்ணை இம்ரான் தனியாக வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். அப்படி தங்கியிருக்கும்போதும் அடிக்கடி அவர் வந்து இவருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

இந்த சூழலில் இம்ரானின் சகோதரரும் மற்றொரு போலீஸ் அதிகாரியுமான பர்கான் என்பவரும் இந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து இம்ரானிடம் கூறுகையில், அவர் இவரை மிரட்டியுள்ளார். மேலும் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்வதாக கூறியும் துன்புறுத்தி வந்துள்ளார். இப்படி இருவரும் மாறி மாறி சுமார் 2 வருடங்களாக அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொடுமை செய்து வந்துள்ளனர்.

கோப்பு படம்
கோப்பு படம்

இந்த நிலையில் இதுகுறித்து தற்போது பாதிக்கப்பட்ட பெண் இரண்டு போலீசார் மீதும் புகார் அளித்துள்ளர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், அவர்கள் இருவராலும் தான் மிகவும் கஷ்டப்பட்டேன் என்றும், தினமும் தன்னை அடித்து துன்புறுத்துவதோடு கொலை மிரட்டலும் இருவரும் விடுத்ததால் 2 வருடங்களாக அவர்கள் மீது புகார் கொடுக்கவில்லை; ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரால் நான் மிகவும் தாக்கப்பட்டதால் தற்போது என்ன ஆனாலும் சரி என்று புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

கோப்பு படம்
கோப்பு படம்

மேலும் தற்போது தனது உயிருக்கு இம்ரான், பர்கான் ஆகிய 2 போலீசாராலும் ஆபத்து உள்ளது என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், முறையாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளனர். 2 போலீசார் சேர்ந்து ஒரு இளம்பெண்ணை 2 ஆண்டுகளாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories