இந்தியா

180ல் 161ஆவது இடம்.. பத்திரிகை சுதந்திரத்தில் மேலும் பின்னுக்குச் சென்ற இந்தியா.. சிறப்புத் தொகுப்பு!

இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் எந்த அளவில் உள்ளது என்பது குறித்த சிறப்புக் கட்டுரை

180ல் 161ஆவது இடம்.. பத்திரிகை சுதந்திரத்தில் மேலும் பின்னுக்குச் சென்ற இந்தியா.. சிறப்புத் தொகுப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதும் பத்திரிகை சுதந்திர தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா 1986ம் ஆண்டு டிசம்பர் 17லில் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளுக்கும் கொல்லப்பட்ட சம்பவம் பின்னர் பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுபெற்றது.

தைத்தொடர்ந்து உலக பத்திரிகையாளர்களின் தொடர் முன்னெடுப்புகள் காரணமாக 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்று கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் தேதி பத்திரிகை சுதந்திர நாள் முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி உலகம் முழுவதும் பத்திரிகை சுதந்திர தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

180ல் 161ஆவது இடம்.. பத்திரிகை சுதந்திரத்தில் மேலும் பின்னுக்குச் சென்ற இந்தியா.. சிறப்புத் தொகுப்பு!

இந்நிலையில் இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் எந்த அளவில் உள்ளது என்பது குறித்த சிறப்புக் கட்டுரை :-

இந்தியாவில் 2014ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற நாள் முதல் இன்று வரை ஊடகத்திற்கான சுதந்திரத்தை நசுக்கப்பட்டே வருகிறது. மேலும், பா.ஜ.க அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பத்திரிகையாளர்களை, தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் கொடூரமும் அரங்கேறி வருகிறது.

அதேபோல், மோடி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோர் இந்துத்துவா கும்பலால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இப்படிப் மோடி ஆட்சியல் பாதுகாப்பற்ற சூழ்நிலையில்தான் பத்திரிக்கையாளர்கள் இந்தியாவில் பணியாற்றி வருகிறார்கள்.

180ல் 161ஆவது இடம்.. பத்திரிகை சுதந்திரத்தில் மேலும் பின்னுக்குச் சென்ற இந்தியா.. சிறப்புத் தொகுப்பு!

ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் அறிக்கை :-

இந்த சூழலில் கடந்த 2022ம் ஆண்டு, ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (Reporters Without Borders (RSF) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடக சுதந்திரத்தை நசுக்கும் தலைவர்களின் பட்டியலில் இந்தியப் பிரதமர் மோடியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

Reporters Without Borders (RSF) என்ற அமைப்பு உலகம் முழுவதும் ஊடக செய்திகளுக்குத் தணிக்கை முறையை ஏற்படுத்துவது, பத்திரியாளர்கள்களை சிறையில் தள்ளுவது அல்லது அவர்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவீழ்த்து விடுவது அல்லது நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்தியாளர்களின் மரணத்திற்குக் காரணமாக அமைவது போன்றவை குறித்து ஆய்வு நடத்தியுள்ளது.

180ல் 161ஆவது இடம்.. பத்திரிகை சுதந்திரத்தில் மேலும் பின்னுக்குச் சென்ற இந்தியா.. சிறப்புத் தொகுப்பு!

இதன் முடிவுகளை Gallery of Grim Portraits என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் உள்ள தலைவர்களில் 37 பேர் ஊடகங்களின் சுதந்திரத்தை நசுக்குகிறார்கள் என RSF அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதில் இந்திய நாட்டின் பிரதமர் மோடியின் பெயரையும் இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும், 2014ம் ஆண்டு பிரதமராகப் மோடி பதவியேற்ற நாள் முதல் ஊடக சுதந்திரத்தின் குரல்வளையை நெரித்து வருவதாக RSF அமைப்பு குற்றம் சாட்டியது மட்டுமல்லாமல், முதல்வராக இருந்தபோதே ஊடகங்களை நசுக்குவதற்குக் குஜராத் மாநிலத்தை ஆய்வுக் கூடமாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் விமர்சித்துள்ளது.

180ல் 161ஆவது இடம்.. பத்திரிகை சுதந்திரத்தில் மேலும் பின்னுக்குச் சென்ற இந்தியா.. சிறப்புத் தொகுப்பு!

பின்னர் பிரதமராகப் பதவியேற்ற பின் ஊடகங்களில் சாமானிய மக்களுக்கான ஆதரவு நிலைப்பாடு போன்ற தேசிய கொள்கை பேச்சுகள் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை அதிகப்படியாகப் பரவ விடுதல் போன்றவற்றைக் கொள்கையாகக் கொண்டு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஊடக நிறுவனங்களை நடத்தும் பெரு முதலாளிகளுடன் பிரதமர் மோடி நட்பு பாராட்டியதால் அவற்றில் பணிபுரிவோர் பிரதமர் மோடியை விமர்சிக்க அஞ்சியதாகவும், மோடிக்கு எதிராக செய்தி வெளியிடுவோரை மிரட்டும் செயலில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக பெண் ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதை RSF அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

180ல் 161ஆவது இடம்.. பத்திரிகை சுதந்திரத்தில் மேலும் பின்னுக்குச் சென்ற இந்தியா.. சிறப்புத் தொகுப்பு!

இந்நிலையில் இந்தாண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பத்திரிகை சுதந்திரம் உள்ள 180 நாடுகளின் இந்தியாவுக்கு 161ம் இடமே கிடைத்துள்ளது. 2022ல் 142வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது மேலும் பின்னுக்குச் சென்றுள்ளது. அதேவேளையில், பாகிஸ்தான் கடந்த ஆண்டு 157-வது இடத்தில் இருந்தது.

இந்த ஆண்டு 150-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மற்றொரு அண்டை நாடான இலங்கை கடந்த 2022-ல் இந்தப் பட்டியலில் 146-வது இடத்தில் இருந்த நிலையில் 2023-ல் 135-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அமெரிக்க வெளிவிவகார துறை அறிக்கை :-

இது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் , கடந்த மார்ச் 20ம் தேதி இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம், மத மற்றும் இன சிறுபான்மையினரை குறிவைக்கும் வன்முறை உள்ளிட்ட மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகம் நடைபெற்றுள்ளதாக அமெரிக்காவின் வெளிவிவகார துறை அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் வெளிவிவகார துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சார்பில் உலக நாடுகளின் மனித உரிமை மீறல் குறித்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

180ல் 161ஆவது இடம்.. பத்திரிகை சுதந்திரத்தில் மேலும் பின்னுக்குச் சென்ற இந்தியா.. சிறப்புத் தொகுப்பு!

அந்த அறிக்கையில், ரஷ்யா, சீனா, ஈரான், வட கொரியா, மியான்மர் போன்ற நாடுகளில் பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் 2022ம் ஆண்டில் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், பத்திரிகை சுதந்திரம், மத மற்றும் இன சிறுபான்மையினரை குறிவைக்கும் வன்முறை உள்ளிட்ட மனித உரிமை மீறல் வழக்குகள் அதிகம் பதிவாகியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதோடு, அரசியல் தடுப்புக்காவல், தன்னிச்சையான கைதுகள் அல்லது தடுப்புக்காவல்கள், ஊடகத்தின் மீதான கட்டுப்பாடுகள், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை உள்ளிட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களும் அதிகஅளவில் நடந்துள்ளன என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

180ல் 161ஆவது இடம்.. பத்திரிகை சுதந்திரத்தில் மேலும் பின்னுக்குச் சென்ற இந்தியா.. சிறப்புத் தொகுப்பு!

மனித உரிமை அமைப்பு மற்றும் ஊடக நிறுவனங்கள் கோரிக்கை :-

இந்நிலையில், உலக பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி மனித உரிமை அமைப்பு மற்றும் ஊடக நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், “மிரட்டல், அச்சுறுத்தல், பொய் பிரசாரம், தணிக்கை, தாக்குதல், சிறைத் தண்டனை போன்றவற்றை இந்தியப் பத்திரிகையாளர்கள் ஏற்கனவே சந்தித்து வரும் சூழலில், பத்திரிகையாளர் சுதந்திரத்தை முடக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் தகவல் தொழில்நுட்ப திருத்த விதிகள் திரும்பப் பெறப்பட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories