இந்தியா

Smart வகுப்பில் திடிரென ஓடிய ஆபாச வீடியோ.. அதிர்ந்த மாணவர்கள்.. பஞ்சாப் ஆசிரியரின் செயலால் அதிர்ச்சி !

பஞ்சாபில் அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு எடுத்து கொண்டிருந்த ஆசிரியர் தவறுதலாக தனது மொபைல் போனில் இருந்த ஆபாச படத்தை மாணவர்கள் முன்னிலையில் போட்டு காட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Smart வகுப்பில் திடிரென ஓடிய ஆபாச வீடியோ.. அதிர்ந்த மாணவர்கள்.. பஞ்சாப் ஆசிரியரின் செயலால் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள காலத்தில் நாடு முழுவதும் சில மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகள் தனியார் பள்ளிக்கு நிகராக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் தற்போது ஸ்மார்ட் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இங்கே பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு என்று பிரத்யேக திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் குறிப்பிட்ட சில மாநிலங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் இருப்பது போல் பஞ்சாபிலும் உள்ள அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் இருக்கிறது. இங்கு மாணவர்களுக்கு Projector வைத்து LCD உதவியோடு நடத்தப்படும் வகுப்புகள் திரையிட்டு காட்டப்பட்டு வருகிறது. அங்கிருக்கும் அனைத்து வகுப்புகளும் இது போல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Smart வகுப்பில் திடிரென ஓடிய ஆபாச வீடியோ.. அதிர்ந்த மாணவர்கள்.. பஞ்சாப் ஆசிரியரின் செயலால் அதிர்ச்சி !

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டத்தில் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள கோபிந்த்புரா கிராமத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியில் ராஜீவ் குமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் அங்கிருக்கும் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பு மூலம் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.

Smart வகுப்பில் திடிரென ஓடிய ஆபாச வீடியோ.. அதிர்ந்த மாணவர்கள்.. பஞ்சாப் ஆசிரியரின் செயலால் அதிர்ச்சி !

இதற்கு தனது மொபைல் போனை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது தனது மொபைல் போனில் இருந்த ஆபாச படம் தெரியாமல் திரையில் ஒளிபரப்பானது. இதனை கண்டதும் அதிர்ச்சியடைந்த ஆசிரியர் உடனடியாக அதனை நிறுத்தினர். இருப்பினும் இந்த சம்பவத்தால் மாணவிகள் பெரும் அதிர்ச்சியில் இருந்தனர்.

Smart வகுப்பில் திடிரென ஓடிய ஆபாச வீடியோ.. அதிர்ந்த மாணவர்கள்.. பஞ்சாப் ஆசிரியரின் செயலால் அதிர்ச்சி !

தொடர்ந்து இதுகுறித்து தங்கள் பெற்றோருக்கு மாணவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல் நிலையத்திலும் புகார் அளித்து சம்பந்த பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து ராஜீவ் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories