இந்தியா

91.43% மதிப்பெண் எடுத்தும் தேர்ச்சி பெறாத மாணவி: உபி 10ம் வகுப்பு தேர்வு முடிவில் குளறுபடி -நடந்தது என்ன?

உத்தர பிரதேசத்தில் அச்சு பிழை காரணமாக 91.43% மதிப்பெண் பெற்ற 10-ம் வகுப்பு மாணவி தேர்ச்சி பெறவில்லை என்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

91.43% மதிப்பெண் எடுத்தும் தேர்ச்சி பெறாத மாணவி: உபி 10ம் வகுப்பு தேர்வு முடிவில் குளறுபடி -நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் உத்தர பிரதேசத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்து விட்டு, தேர்வு முடிவுகள் வெளியீட்டுக்காக காத்திருந்தனர். இந்த சூழலில் கடந்த 25-ம் தேதி உபி 10-ம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின.

இந்த நிலையில் இதில் மாணவி ஒருவர் 91.43% மதிப்பெண் எடுத்தும் கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த செய்தி உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி நகரில் பாதர் பகுதியை சேர்ந்தவர் பாவனா வர்மா. இந்த மாணவி 10-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். தேர்வு முடிவுகளில் இந்த மாணவி 91.43% மதிப்பெண் எடுத்துள்ளார். ஆனால் இவர் தேர்ச்சி பெறவில்லை என்று ரிசல்ட் வந்துள்ளது.

91.43% மதிப்பெண் எடுத்தும் தேர்ச்சி பெறாத மாணவி: உபி 10ம் வகுப்பு தேர்வு முடிவில் குளறுபடி -நடந்தது என்ன?

அதாவது இந்த மாணவி 70 மதிப்பெண்களுக்கான எழுத்து தேர்வில் இந்தியில் 65 மதிப்பெண்களும், ஆங்கிலம், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 67 மதிப்பெண்களும், சமஸ்கிருதத்தில் 66 மதிப்பெண்களும், அறிவியலில் 52 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

மொத்தம் 6 பாடங்களில் 420 மதிப்பெண்களுக்கு 384 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். இருப்பினும் அவருக்கு செய்முறை தேர்வின் மதிப்பெண்ணில் ஏற்பட்ட பிழை காரணமாக மாணவி பாவனா தேர்ச்சி பெறவில்லை என்று வந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில், "செய்முறை பயிற்சி தேர்வில் 30-க்கு 30 என 6 பாடங்களுக்கு 180/180 மதிப்பெண்கள் பள்ளியில் இருந்து வழங்கப்பட்டு விட்டன. ஆனால், மதிப்பெண் சான்றிதழில் ஒவ்வொரு பாடத்திலும் 3 மதிப்பெண்களே நான் பெற்றுள்ளதாக பதிவாகியுள்ளது.

91.43% மதிப்பெண் எடுத்தும் தேர்ச்சி பெறாத மாணவி: உபி 10ம் வகுப்பு தேர்வு முடிவில் குளறுபடி -நடந்தது என்ன?

இந்த பிழை காரணமாக நான் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று வந்துள்ளது. இதனை விரைவில் சரி செய்ய வேண்டும் என்று" கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். ஒருவேளை பாவனா 180 மதிப்பெண் பெற்றுள்ளதாக ரிசல்ட்டில் வந்திருந்தால் 600-க்கு (384+180) = 564 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முன்னிலை வகித்திருப்பார் என்று மாணவி படித்த பள்ளி முதல்வரும் வேதனை தெரிவித்துள்ளார். அதோடு வாரியத்தின் இது போன்ற தவறால் இந்த மாணவி அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மாணவிக்கு இது போல் நடந்துள்ள சம்பவத்துக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு சில மாணவர்கள் இதுபோல் பிழை காரணமாக பாதிக்கப்பட்டிருந்தால் முன் வந்து புகார் கொடுக்கும்படி அனைவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories