இந்தியா

உடலுறவு தொல்லை : கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை.. காப்பாற்றி பின்னர் கொலை செய்த கணவர்.. நடந்தது என்ன ?

உடலுறவுக்கு மறுத்த மனைவியை போதையில் அடித்து கொன்ற கணவர், சடலம் அருகே விடிய விடிய இருந்துள்ள சம்பவம் சத்தீஸ்கரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடலுறவு தொல்லை : கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை.. காப்பாற்றி பின்னர் கொலை செய்த கணவர்.. நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூரைச் சேர்ந்தவர் சங்கர் ராம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆஷா பாய் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகியுள்ளது. இதில் மது போதைக்கு அடிமையான சங்கர் ராம், அடிக்கடி குடித்து விட்டு வருவதுடன் மனையுடன் கட்டயப்படுத்தி உடலுறவு மேற்கொள்வார். சில நேரங்களில் மனைவியும் கணவருடன் சேர்ந்து மது அருந்துவார்.

இந்த நிலையில் சம்பவத்தன்றும் கணவருடன் சேர்ந்து மனைவியும் மது அருந்தியுள்ளார். தொடர்ந்து மது போதையில் இருந்த கணவர், தன்னுடன் நெருக்கமாக இருக்குமாறு மனைவியை வலுக்கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு மனைவி மறுப்பு தெரிவித்ததோடு தனக்கு தூக்கம் வருவதாக கூறி தூங்க சென்றுள்ளார்.

உடலுறவு தொல்லை : கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை.. காப்பாற்றி பின்னர் கொலை செய்த கணவர்.. நடந்தது என்ன ?

இதனால் கோபமடைந்த கணவர், அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி வீட்டில் இருந்து ஓடி போய் அருகில் இருந்த தண்ணீர் நிரம்பிய கிணற்றுக்குள் குதித்துள்ளார். பின்னாலே சென்ற கணவர் கிணற்றில் குதித்து மனைவியை காப்பாற்றியுள்ளார்.

உடலுறவு தொல்லை : கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை.. காப்பாற்றி பின்னர் கொலை செய்த கணவர்.. நடந்தது என்ன ?

காப்பாற்றிய பின்னர் சமாதானம் பேசிய அவர், மீண்டும் மனைவியை உடலுறுவு கொள்ளுமாறு தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு விடாப்பிடியாக மறுப்பு தெரிவித்த மனைவியை தாறு மாறாக அடித்துள்ளார். மேலும் அவரது பிறப்புறுப்பிலும் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மனைவி ஆஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடலுறவு தொல்லை : கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை.. காப்பாற்றி பின்னர் கொலை செய்த கணவர்.. நடந்தது என்ன ?

மனைவி உயிரிழந்ததை கண்ட கணவர் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போனார். பின்னர் சடலத்தை என்ன செய்வது என்று தெரியமால், அதன் அருகேயே அமர்ந்திருந்து, மனைவியின் முகத்தையே வெறிக்க வெறிக்க பார்த்துள்ளார். இப்படியே விடிந்ததும் கிணறு அருகே வந்த அந்த பகுதி வாசிகள் இதனை கண்டு அதிர்ந்துபோய் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததோடு மட்டுமின்றி, சங்கர் ராமை கைது செய்து விசாரித்தனர். அப்போது நடந்த சம்பவத்தை கூறி வாக்குமூலம் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories