இந்தியா

தேசிய கட்சி அந்தஸ்தை இழந்த திரிணாமுல், CPI.. வேறு எந்த எந்த கட்சிகள் தேசிய அந்தஸ்தை இழந்தது?

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்து விட்டதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேசிய கட்சி அந்தஸ்தை இழந்த திரிணாமுல், CPI.. வேறு எந்த எந்த கட்சிகள் தேசிய அந்தஸ்தை இழந்தது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் தேசிய கட்சி என்ற அந்தஸ்து பெற வேண்டும் என்றால் 4 மாநிலங்களில் 6% வாக்குகள் பெற்று இருக்க வேண்டும் அப்போதுதான் தேசிய கட்சி என்ற அந்தஸ்து பெற முடியும்.

ஒரு முறை தேசிய அந்தஸ்து பெற்றுவிட்டால் மட்டும் போதாது ஒவ்வொரு தேர்தலிலும் 6% வாக்குகளுக்கு மேல் பெற்றுக்கொண்டே இருந்ததால்தான் தேசிய கட்சி என்ற அந்தஸ்தில் தொடரமுடியும். 6%க்கு கீழ் வாக்குகள் குறைத்தால் தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தலைமைத் தேர்தல் அணையும் திரும்பப் பெற்று விடும்.

தேசிய கட்சி அந்தஸ்தை இழந்த திரிணாமுல், CPI.. வேறு எந்த எந்த கட்சிகள் தேசிய அந்தஸ்தை இழந்தது?

அந்த வகையில்தான் தற்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்துள்ளது. அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தேசிய கட்சிகள் அந்தஸ்தை இழந்துள்ளது.

மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப், கோவா, குஜராத் மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றதன் மூலம் தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. கட்சி தொடங்கிய பத்து ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சி தேசிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

தேசிய கட்சி அந்தஸ்தை இழந்த திரிணாமுல், CPI.. வேறு எந்த எந்த கட்சிகள் தேசிய அந்தஸ்தை இழந்தது?

தற்போது பா.ஜ.க, காங்கிரஸ், சி.பி.ஐ(எம்), பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய 6 கட்சிகள் மட்டுமே தற்போது தேசிய கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. அதேபோல் உத்தர பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தளம், ஆந்திராவில் பாரத் ரஷ்டிர சமிதி, மணிப்பூரில் பிடிஏ கட்சி, புதுச்சேரியில் பமக, மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.பி, மிசோரமில் எம்.பி.சி ஆகிய கட்சிகள் மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை இழந்துள்ளன.

banner

Related Stories

Related Stories