இந்தியா

RN ரவியை அடுத்து பணிந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை: வழக்கு விசாரணைக்குப் பயந்து 3 மசோதாக்களுக்கு ஒப்புதல்!

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, 3 மசோதாக்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்ததராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

RN ரவியை அடுத்து பணிந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை: வழக்கு விசாரணைக்குப் பயந்து 3 மசோதாக்களுக்கு ஒப்புதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம்,தெலங்கானா போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

குறிப்பாகத் தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்த மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் காலத்தை கடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஆளுநரின் செயல்பாட்டுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து 144 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஒப்புதல் கொடுக்காமலிருந்து வந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் கொடுத்துள்ளார். இதையடுத்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

RN ரவியை அடுத்து பணிந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை: வழக்கு விசாரணைக்குப் பயந்து 3 மசோதாக்களுக்கு ஒப்புதல்!

தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியைப் போன்றே தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்ததராஜனும் அம்மாநில அரசு நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

இதையடுத்து தெலங்கானா மாநில அரசு ஆளுநர் தமிழிசை சௌந்ததராஜன் நடவடிக்கையை கண்டித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கு மார்ச் 27ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் ஆளுநர் தமிழிசை சௌந்ததராஜனுக்கு எதிராக தெலங்கானா மாநில அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மூன்று மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.

RN ரவியை அடுத்து பணிந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை: வழக்கு விசாரணைக்குப் பயந்து 3 மசோதாக்களுக்கு ஒப்புதல்!

ஆளுநர் சார்பில் அவரது வழக்கறிஞர் திங்களன்று உச்சநீதின்றதில் ஒரு கடிதம் கொடுத்துள்ளார். அதில், தெலுங்கானா மோட்டார் வாகனங்கள் வரிவிதிப்பு (திருத்தம்) மசோதா 2022, தெலுங்கானா நகராட்சிகள் (திருத்த மசோதா) 2023 மற்றும் பேராசிரியர் ஜெயசங்கர் தெலுங்கானா வேளாண் பல்கலை (திருத்தம்) மசோதா, 2023 ஆகியவை மூன்று மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீதம் உள்ள 7 மசோதாக்களில் இரண்டு மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் மூன்று மசோதாக்கள் ஆளுநரின் தீவிர பரிசீலனையில் உள்ளது என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர்களின் அடாவடித்தனத்தால் மாநில அரசுகள் தங்களது உரிமைகளைப் போராடிப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதையே இந்த சம்பவங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

banner

Related Stories

Related Stories