முரசொலி தலையங்கம்

”சந்தேகத்துக்குரியவரா இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி”.. முரசொலி தலையங்கம் கடும் சாடல்!

இதுவரை சர்ச்சைக்குரியவராக மட்டுமே இருந்த ஆளுநர், இப்போது சந்தேகத்துக்குரியவராகவும் ஆகி இருக்கிறார்.

”சந்தேகத்துக்குரியவரா இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி”.. முரசொலி தலையங்கம் கடும் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (11-04-2023)

அத்துமீறும் ஆளுநர் – 2

சட்டமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டால் அது ஆளுநரின் கையெழுத்தைப் பெற்ற பிறகுதான் சட்டமாக முடியும். இந்த மசோதா அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பும் ஆளுநருக்குச் செல்லும். நிறை வேற்றப்பட்ட பிறகும் அவரது கையெழுத்துக்காக அனுப்பி வைக்கப்படும். இது குறித்து ஆளுநருக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அவர் மாநில அரசைக் கேட்கலாம். அதற்கு மாநில அரசு விளக்கம் அளிக்கும். ஆளுநர் திருப்பி அனுப்பிய அவசர சட்டத்தை மீண்டும் நிறைவேற்றி மாநில அரசு அனுப்பி வைத்தால் இரண்டாவது முறை ஆளுநர் அதனை நிராகரிக்க முடியாது. ஒப்புதல் தந்துதான் ஆக வேண்டும்.

இரண்டாவது முறை அனுப்பிய பிறகும் ஆன்லைன் ரம்மி தடைச் சட் டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் இருக்கிறார் ஆளுநர். கேட்டால் இதற் கான விளக்கத்தை பொதுவெளியில் சொல்லி இருக்கிறார். அரசியல் சட்ட அதிகார மிக்க பதவியில் இருப்பவர்கள் தாங்கள் பதவி ஏற்கும் போது ரகசியக் காப்பு உறுதிமொழியை எடுப்பார்கள். 'எனக்கு நேரடியாகத் தெரிய வருவதை நேரடியாகவோ மறைமுகமாகவோ யாருக்கும் சொல்ல மாட் டேன்' என்பதுதான் ரகசிய காப்பு உறுதிமொழியின் உள்ளடக்கம் ஆகும். சனாதனம், ஆரியம் என்ற உதவாக்கரை கருத்துகளை அவர் பொதுவெளி யில் உதிர்த்து விட்டுப் போகட்டும். ஆனால் நிர்வாக ரீதியாக நடந்து வரும் மிகப்பெரிய ஆட்சியியல் விவகாரம் குறித்த தனது நிலைப்பாட்டை இப்ப டியா பொதுவெளியில் யாரோ சிலரைக் கூட்டி வைத்துக் கொண்டு பட்ட வர்த்தனமாகச் சொல்வது? அனுப்பிய சட்டங்களுக்கு ஆளுநரின் பதில் என்ன என்று தெரியாமல் ஆட்சியாளர்கள் இருக்கும் போது, அதற்கான பதிலை இப்படியா அலட்சியமாகச் சொல்வது? ‘நிலுவை என்றால் நிறுத்தி வைப்பு’ என்று அரசியலமைப்புச் சட்ட மேதையாக தன்னை நினைத்துக் கொள்வது?

”சந்தேகத்துக்குரியவரா இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி”.. முரசொலி தலையங்கம் கடும் சாடல்!

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதா மீது முடிவெ டுக்க அரசியலமைப்பின் 200வது விதியின்படி ஆளுநருக்கு 3 வாய்ப் புகள் உள்ளன. முதலாவதாக மசோதா சரியாக இருந்தால் ஒப்புதல் தரலாம். 2வது. மசோதா சரியில்லை என்றால் நிறுத்தி வைக்கலாம். அது கிட்டத்தட்ட நிராகரிப்பதாகவே அர்த்தம். இதை உச்சநீதிமன்றம் பல் வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தி உள்ளது. மூன்றாவது மசோதா மீதான முடிவை எடுக்க குடியரசுத் தலைவருக்கு அதை அனுப்பி வைக்கலாம்" என்கிறார் ஆளுநர்.

இவர் நிறுத்தி வைத்திருக்கிறாரா, அல்லது எப்போதாவது ஒப்புதல் தருவாரா என்பதை எப்படி தெரிந்து கொள்வது? அதற்கு அதிகாரப்பூர்வ மான கருத்துப் பரிமாற்றம் வேண்டாமா? எங்காவது ஏதாவது ஒரு ஊர் மேடையில் இவர் விளக்கம் சொல்வார் என்று ஆட்சியாளர்கள் காத்தி ருக்க வேண்டுமா? ஆளுநர் மாளிகை வாசலில் காத்திருக்க வேண்டுமா?

“விதிவிலக்காக இரண்டு வித மசோதாவை ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியாது. ஒன்று அன்றாட செலவினம் தொடர்பான பண மசோதா. 2வது சட்டப்பேரவை அதன் வரம்புக்கு உட்படாத மசோதாவை நிறைவேற்றி யதாக ஆளுநர் கருதினால், தமது கருத்துக்களுடன் அந்த மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பலாம். அந்த மசோதா மறுபரிசீலனை செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு மீண்டும் ஆளுநரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப் பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதுதான் ஆளுநரின் அரசியலமைப்பு நிலைப்பாடு" என்கிறார் ஆளுநர்.

ஆமாம். அப்படித்தான் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா? அதனை ஆளுநர் என்ன செய்திருக்கிறார்? ஒப்புதல் வழங்கிவிட்டாரா? ஒப்புதல் வழங்கி விட்டல்லவா வேறு வேலை பார்த்திருக்க வேண்டும்? தினமும் உயிர்கள் பலியாகி வருகிறதே ஆன்லைன் சூதாட்டத்தால்...!

”சந்தேகத்துக்குரியவரா இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி”.. முரசொலி தலையங்கம் கடும் சாடல்!

ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளை ஆளுநர் கையெழுத்துப் போடாததன் விளைவாக மட்டும் தானே கருத முடியும்? தற்கொலைகள் நின்ற நாள் தான் ஆளுநர் கையெழுத்துப் போடும் நாள் என்று சொல்லலாமா? இத்தனைக்கும் இவர் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். கண்ணுக்கு முன்னால் குற்றவாளி போனால் கூட 'நம் லிமிட் இல்லை' என்று கண்ணை மூடிக்கொண்டு இருப்பாரா?

சட்டம் ஒழுங்கை கண்காணிப்பது என்பது மாநில அரசின் கடமையா கும். எந்த வகைப்பட்ட குற்றமாக இருந்தாலும் முதல்கட்ட விசாரணையை நடத்த வேண்டியது மாநில அரசாங்கம் அல்லவா? தேச விரோதப் பாதுகாப்புக் குற்றமாகவே இருந்தாலுமே, முதல் கடமை மாநில காவல் துறைக்கு இருக்கிறதே? ‘மத்திய காவல் வரட்டும்' என்று ஒரு மாநில அரசு இருந்தால் சும்மா விட்டு விடுவார்களா?

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை குற்றவாளிகளையும் சில மணி நேரத்தில் கைது செய்தது தமிழ்நாடு போலீஸ். அதில் கூட குறை கண்டுபிடித்தாரே ஆளுநர். மத்திய போலீஸின் கடமை என்று இருந்ததா அரசு? மாநில போலீஸ் கொடுத்த ஆதாரங்களை வைத்துத்தானே மத்திய முகமை வழக்கை விசாரித்து வரு கிறது. எனவே சட்டம் ஒழுங்கு மீறல் எதுவாக இருந்தாலும் அதில் பொறுப்பு மாநில அரசுக்கு இருக்கிறது.

ஆன்லைன் சூதாட்டம் குறித்த சட்டங்களை நிறைவேற்றலாம் என்று ஒன்றிய அமைச்சர்களும் சொல்லி இருக்கிறார்களே!

"அனைத்து வகையான சூதாட்டமும் மாநில பட்டியலில் உள்ளதால், மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றலாம். பல மாநிலங்கள் இத்தகைய சட்டத்தை இயற்றி உள்ளன” – என்று கடந்த ஆண்டு 3.8.2022 நாடாளுமன்றத்தில் சொன்ன வர் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் கேட்ட கேள்விக்கு ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் பதில் அளிக்கும் போதும் இதனை உறுதி செய்துள்ளார். “ஆன்லைன் சூதாட் டங்களை தங்கள் வரம்புக்குள் கொண்டுவரத் தேவையான சட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. பொது சூதாட்டச் சட்டம் - 1867 இன் படி பெரும்பாலான மாநில அரசுகள் இவற்றை எதிர்கொள்வ தற்கு தங்களது சொந்த சட்டத்தை இயற்றி உள்ளன. பந்தயம், சூதாட்டம் ஆகியவை அரசியலமைப்புச் சட்டத்தின் 7 ஆவது அட்டவணையில் 34 ஆவது பிரிவில் இடம்பெற்றுள்ளது. 7 ஆவது அட்டவணை 34 ஆவது பிரிவில் உள்ளவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை மாநில அரசு களே இயற்ற முடியும்” என்று சொல்லி இருக்கிறார்.

அப்புறம் என்ன சந்தேகம் ஆளுநருக்கு? நமக்குத்தான் ஆளுநர் சந்தேகத்துக்குரியவராக ஆகி இருக்கிறார்.

இதுவரை சர்ச்சைக்குரியவராக மட்டுமே இருந்த அவர், இப்போது சந்தேகத்துக்குரியவராகவும் ஆகி இருக்கிறார்.

தொடரும்.

banner

Related Stories

Related Stories