இந்தியா

”எனக்கு அவரை பிடிக்காது, இவரைத்தான் பிடிக்கும்” -மெஸ்ஸி குறித்த கேள்விக்கு பதிலளித்த கேரள சிறுமி !

மெஸ்ஸி குறித்த கேள்விக்கு பதிலளித்த கேரள சிறுமியின் பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

”எனக்கு அவரை பிடிக்காது, இவரைத்தான் பிடிக்கும்” -மெஸ்ஸி குறித்த கேள்விக்கு பதிலளித்த கேரள சிறுமி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியா கால்பந்து அரங்கில் உலகளவில் ஜொலிக்கவில்லை என்றாலும், இந்தியாவில் பல்வேறு இடங்களில் கிரிக்கெட்டுக்கு இணையாக கால்பந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும்ம், கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் கிரிக்கெட்டை விட அதிகம் வரவேற்பு பெரும் விளையாட்டாக கால்பந்து இருக்கிறது என்று சொன்னாலும் அது தவறில்லை.

கேரளாவில் அர்ஜென்டினா, பிரேசில், போர்த்துக்கல் ஆகிய அணிகளுக்கு அதிகளவில் கால்பந்து ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் கதாநாயர்களாக கொண்டாடட்பட்டு வருகிறார்கள். கடந்த உலககோப்பையை அர்ஜென்டினா அணி வென்றபோது அது கேரளத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

”எனக்கு அவரை பிடிக்காது, இவரைத்தான் பிடிக்கும்” -மெஸ்ஸி குறித்த கேள்விக்கு பதிலளித்த கேரள சிறுமி !

இந்த நிலையில், அர்ஜென்டின அணியின் நட்சத்திர மெஸ்ஸி குறித்த கேள்விக்கு கேரளாவின் 9 வயது சிறுமி எழுதிய பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ரிசா பாதிமா. இவர் அங்குள்ள புதுபள்ளி பகுதியில் இயங்கிவரும் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரின் பள்ளியில் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், அதில் மலையாள பாடத் தேர்வில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி குறித்து கட்டுரை எழுதுங்கள் என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்த கேள்விக்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டிருந்தது.

”எனக்கு அவரை பிடிக்காது, இவரைத்தான் பிடிக்கும்” -மெஸ்ஸி குறித்த கேள்விக்கு பதிலளித்த கேரள சிறுமி !

ஆனால், இந்த கேள்விக்கு சிறுமி ரிசா பாதிமா, "நான் பிரேசில் அணியின் ரசிகை. எனக்கு பிரேசில் வீரர் நெய்மரைதான் பிடிக்கும்.மெஸ்ஸியை பிடிக்காது" என பதிலெழுதியுள்ளார். இந்த பதிலை பார்த்த ஆசிரியர் அந்த சிறுமியை அழைத்து இது குறித்து கேட்டுள்ளார். அப்போது கேள்வி தாளில் மெஸ்ஸியின் புகைப்படத்தை பார்த்ததும் எனக்கு தோன்றியதை எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த கேள்வித்தாளை அங்கிருந்த ஆசிரியர்கள் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories