விளையாட்டு

அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்.. உலகச்சாதனை படைத்த ரொனால்டோ.. கொண்டாடும் ரசிகர்கள் !

சர்வதேச ஆடவர் கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை போர்த்துக்கல் அணி வீரர் ரொனால்டோ படைத்துள்ளார்.

அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்.. உலகச்சாதனை படைத்த ரொனால்டோ.. கொண்டாடும் ரசிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த நட்சத்திர வீரர் போர்த்துக்கல் அணி இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. அந்த போட்டியில் ரொனால்டோ கண்ணீரோடு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் அந்த ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்.. உலகச்சாதனை படைத்த ரொனால்டோ.. கொண்டாடும் ரசிகர்கள் !

தற்போது ரொனால்டோ சவூதி அரேபியாவின் லீக் போட்டிகளில் விளையாடிவரும் நிலையில், அங்கு தொடர்ந்து அல்-நாசர் அணிக்காக கோல் அடித்து அசத்தி வருகிறார். இந்த நிலையில் பிபா சர்வதேச கால்பந்து போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், ரொனால்டோவின் போர்த்துக்கல் அணி யூரோ கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டியில் லிச்சென்ஸ்டைன் அணியை சந்தித்தது.

இந்த போட்டியில் அபாரமாக ஆடிய போர்த்துக்கல் அணி அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ இந்த போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து அசத்த போர்த்துக்கல் அணி லிச்சென்ஸ்டைன் அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்.. உலகச்சாதனை படைத்த ரொனால்டோ.. கொண்டாடும் ரசிகர்கள் !

இந்த போட்டி சர்வதேச அளவில் ரொனால்டோவின் 197 போட்டியாக அமைந்தது. இதன் மூலம் அதிக சர்வதேச ஆடவர் கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் குவைத் வீரர் அல்-முதாவா 196 சர்வதேச போட்டிகளில் ஆடியதே சாதனையாக இருந்த நிலையில் அதனை ரொனால்டோ முறியடித்துள்ளார். அதோடு இன்னும் 3 போட்டிகளில் ஆடினால் 200 போட்டிகளில் ஆடிய முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் பெறுவார்.

கடந்த 2003ம் ஆண்டு முதன் முதலில் போர்ச்சுகல் அணிக்காக சர்வதேச போட்டிகளில் களமிறங்கிய ரொனால்டோ இதுவரை 120 கோல்களை அடித்து சர்வதேச போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் தன்னிடம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரொனால்டோவின் போட்டியாளரான மெஸ்ஸி 173 சர்வதேச போட்டிகளில் 99 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories