இந்தியா

பாட்னா இரயில் நிலையத்தில் ஒளிபரப்பான ஆபாச வீடியோ.. பதறியடித்து ஓடிய பயணிகள்.. என்ன நடந்தது ?

இரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் டிவியில் ஆபாச வீடியோ ஒளிபரப்பானதில் பயணிகள் பதறியடித்து ஓடியுள்ளதால் பீகாரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாட்னா இரயில் நிலையத்தில் ஒளிபரப்பான ஆபாச வீடியோ.. பதறியடித்து ஓடிய பயணிகள்.. என்ன நடந்தது ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொதுவாக இந்தியா முழுவதும் முக்கிய இரயில் நிலையங்களில் டிவி அமைக்கப்பட்டிருக்கும். அப்படி அமைக்கப்பட்டிருக்கும் டிவியில் தனியார் தொடர்பாகவும், அரசு தொடர்பாகவும் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும். இதன் மூலம் இரயில்வே துறைக்கு வருமானமும் கிடைக்கிறது.

அவ்வாறு ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் மக்களுக்கு சென்றடையும். இதில் தனியார் நகைக்கடை, துணிக்கடை, அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல ஒளிபரப்பு செய்யப்படும். இதன் மூலம் மாதந்தோறும் இரயில்வே துறைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு லாபம் கிடைக்கும்.

பாட்னா இரயில் நிலையத்தில் ஒளிபரப்பான ஆபாச வீடியோ.. பதறியடித்து ஓடிய பயணிகள்.. என்ன நடந்தது ?

அந்த வகையில் பீகார் மாநிலத்தில் உள்ள சில முக்கிய நகரங்களின் இரயில்வே நிலையத்தில் டிவியில் விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்படும். அவ்வாறு ஒளிபரப்பு செய்யப்படும் டிவியில் ஆபாச திரைப்படம் ஒளிபரப்பான சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ளது பாட்னா. பெரும் நகரான இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இரயில் நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இங்குள்ள ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் தினமும் அதிகரித்தே காணப்படும். இந்தியாவில் ஒரு முக்கிய இரயில் நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.

பாட்னா இரயில் நிலையத்தில் ஒளிபரப்பான ஆபாச வீடியோ.. பதறியடித்து ஓடிய பயணிகள்.. என்ன நடந்தது ?

இந்த இரயில் நிலையத்தில் பல நடைமேடைகளில் டிவி பொறுத்தப்பட்டுள்ளன. இதில் விளம்பரங்கள் மட்டுமின்றி சில பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் சில நேரங்களில் ஒளிபரப்பு செய்யப்படும். அந்த வகையில் சம்பவத்தன்றும் விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

பாட்னா இரயில் நிலையத்தில் ஒளிபரப்பான ஆபாச வீடியோ.. பதறியடித்து ஓடிய பயணிகள்.. என்ன நடந்தது ?

இந்த நிலையில், அங்குள்ள நடைமேடை 10-ல் அமைக்கப்பட்டிருந்த டிவியில் நேற்று திடீரென மூன்று நிமிடங்களுக்கு தொடர்ந்து ஆபாச படம் ஒளிபரப்பானது. இதனை கண்ட பயணிகள், குறிப்பாக பெண் பயணிகள் அலறி அடித்து ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாட்னா இரயில் நிலையத்தில் ஒளிபரப்பான ஆபாச வீடியோ.. பதறியடித்து ஓடிய பயணிகள்.. என்ன நடந்தது ?

மேலும் இதுக்குறித்து பயணிகள் இரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு வந்து இதனை யார் செய்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான காட்சியை அங்கிருந்த பயணி ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரயில்வே நிலையத்தில் இருந்த தொலைக்காட்சியில் 3 நிமிடங்கள் தொடர்ந்து ஆபாச படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது பீகாரில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories