இந்தியா

தனியாக இருக்கும் பெண்களைத் தேடி தேடி லிப்-கிஸ் அடிக்கும் சைக்கோ.. வெளியான வீடியோ.. பீகாரில் அதிர்ச்சி !

பீகாரில் பெண்களை தேடி தேடி முத்தமிட்டு, தப்பியோடி வரும் 'முத்த சைக்கோ'-வை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தனியாக இருக்கும் பெண்களைத் தேடி தேடி லிப்-கிஸ் அடிக்கும் சைக்கோ.. வெளியான வீடியோ.. பீகாரில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பீகார் மாநிலம் கைரா, சிகந்த்ரா, ஜாமுய், அலிகஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாத காலமாக பெண்கள் வெளியில் செல்லவே அச்சத்துடன் காணப்படுகின்றனர். காரணம் அந்த பகுதியில் சுற்றித் திரியும் 'முத்த சைக்கோ' (சீரியல் கிஸ்ஸர்) தான். இந்த சைக்கோ, பொதுவெளியில் தனியாக இருக்கும் பெண்கள், மூதாட்டி, சிறுமி என அனைவரையும் பிடித்து முத்தமிட்டு அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளார்.

இந்த சைக்கோவின் செயலால் அந்த பகுதி பெண்கள் பெரும் பதற்றத்திலே இருந்தனர். தற்போது அந்த சைக்கோ யார் என்று சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அந்த பகுதியில் தொடர்ச்சியாக காணப்பட்டுள்ளது. இருப்பினும் இதனை பெண்கள் வெளியில் சொன்னால் தங்கள் மானம் போய்விடும் என்ற எண்ணத்தில், யாரிடமும் சொல்லவில்லை.

தனியாக இருக்கும் பெண்களைத் தேடி தேடி லிப்-கிஸ் அடிக்கும் சைக்கோ.. வெளியான வீடியோ.. பீகாரில் அதிர்ச்சி !

இப்படியே தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் சில பகுதிகளில் பாதிக்கப்பட்ட பெண்கள், அவரவர் குடும்பத்தாரிடம் தெரிவிக்கவே, அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அந்த நபர் குறித்து எந்த ஒரு அடையாளங்களும் இல்லாமல் இருந்தது.

தனியாக இருக்கும் பெண்களைத் தேடி தேடி லிப்-கிஸ் அடிக்கும் சைக்கோ.. வெளியான வீடியோ.. பீகாரில் அதிர்ச்சி !

இந்த சூழலில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இந்த நபர் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதாவது சம்பவம் நடந்த நாளான மார்ச் 10-ம் தேதி, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஜாமுய் நகர் பகுதியிலுள்ள சதார் மருத்துவமனை வளாகத்திற்குள் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இந்த மர்ம நபர், அவரை கட்டிப்பிடித்து பிடித்து வலுக்கட்டயமாக உதட்டில் முத்தமிட முயன்றார். அவரது பிடியில் இருந்து அந்த பெண் தப்பிக்க முயன்றும், அவர் கட்டாயப்படுத்தி முத்தமிட்டு தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அந்த மருத்துவமனை வளாகத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த முத்த சைக்கோ சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதை வைத்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தற்போது அந்த சைக்கோவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

2 மாத காலத்துக்கு பிறகு அந்த சைக்கோ குறித்த பெரிய தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. எனினும் அந்த நபர் யார் என்ன என்ற விபரம் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை. தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அந்த முத்த சைக்கோ குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பீகாரில் முத்த சைக்கோ தொடர்பான செய்தியும், சிசிடிவி காட்சிகளும் வெளியானதில் இருந்தே, அந்த சைக்கோவை விரைந்து கைது செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளும், வலியுறுத்தல்களும் வருகிறது. அதோடு இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தற்போது பீகார் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories