இந்தியா

உரிமையாளர் செய்த ஒரே செயல்.. திருடிய 10 லட்ச மதிப்பிலான புடவைகளை திருப்பி கொடுத்த தெலுங்கானா திருடர்கள் !

விலையுர்ந்த புடவைகளை திருடிய திருடர்கள் தொடர்பான சிசிடிவி காட்சியை இன்ஸ்டாவில் பதிவிட்டதன் எதிரொலியாக, திருடர்கள் திருடிய பொருட்களை திரும்பி கொடுத்துள்ள நிகழ்வு தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது.

உரிமையாளர் செய்த ஒரே செயல்.. திருடிய 10 லட்ச மதிப்பிலான புடவைகளை திருப்பி கொடுத்த தெலுங்கானா திருடர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொதுவாக திருடர்கள் திட்டம்போட்டு இரவு நேரத்தில்தான் கொள்ளையடிப்பார்கள். மிகச்சிலரே அனைவர் முன்னும் பப்ளிக்காக ரகசியமாக கொள்ளையடித்து செல்வர். அந்த வகையில் பணம், நகைகளை கொள்ளையடிப்பதுபோல் பட்ட பகலில் புடவைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் ஒரு கும்பல்.

புடவை வாங்குவதுபோல் டிப் டாப்பாக கடைக்குள் வந்த அந்த கும்பல் லட்ச காணக்கிலான புடவைகளை நேக்காக அபேஸ் செய்து நகரந்துள்ளது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த கும்பல் திருடிய புடவைகளை உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

உரிமையாளர் செய்த ஒரே செயல்.. திருடிய 10 லட்ச மதிப்பிலான புடவைகளை திருப்பி கொடுத்த தெலுங்கானா திருடர்கள் !

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மணிகொண்டா என்ற பகுதியில் 'தேஜா சேரீஸ்' (tejasarees) என்ற துணிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு என்று பல்வேறு வாடிக்கையாளர்கள் உள்ளனர். தொடர்ந்து பரபரப்பாக இயங்கி வரும் இந்த கடையில் பல வகையான புடவைகள், விலையுயர்ந்த புடவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் 5 பெண்கள், ஒரு ஆண் என 6 பேர் கொண்ட கும்பல் இந்த கடைக்கு வாடிக்கையாளர்களாக வந்துள்ளனர். அப்போது இவர்கள் அங்குள்ள புடவைககளின் கலெக்ஷன்களை பார்த்துக்கொண்டிருந்தனர். ஊழியர்களை ஒவ்வொரு புடவையாக எடுத்துக்காட்ட சொல்லி, அதில் சுமார் 5 புடவைகளை சுருட்டி வைத்துக்கொண்டனர்.

தொடர்ந்து இவர்கள் புடவைகள் எதுவும் வாங்காமல் திரும்பி சென்றுள்ளனர். இவர்கள் நடவடிக்கையில் சந்தேகமடைந்த உரிமையாளர், அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான 5 புடவைகளை பதுக்கி திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும் அவர்கள் ஒரு வெள்ளை நிற ஸ்கார்பியோ காரில் சென்றுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இருப்பினும் அந்த கடையின் உரிமையாளர், அந்த சிசிடிவி காட்சிகளை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு மற்ற கடைகளுக்கு எச்சரிக்கையுடன் இருக்குமாறு பதிவிட்டிருந்தார்.

இவரது இந்த பதிவு செய்தி, ஊடகம் என அனைத்திலும் வெளியாகி வைரலாகியது. தொடர்ந்து இது அந்த கொள்ளை கும்பலுக்கும் தெரியவந்துள்ளது. இதனால் பயந்துபோன அந்த கும்பலில் இருக்கும் பெண் ஒருவர், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இந்த கடையை தொடர்புகொண்டுள்ளார். மேலும் தாங்கள் திருடிய புடவைகளை திரும்ப கொடுத்துவிடுவதாகவும், அந்த சிசிடிவி பதிவை மட்டும் நீக்குமாறும் கெஞ்சியுள்ளார்.

இதையடுத்து மீண்டும் அதே பெண் போன் செய்து, கடையின் வெளியே புடவைகள் உள்ளதாகவும், எடுத்துக்கொள்ளுமாறும் கூறியுள்ளார். இதையடுத்து புடவைகளும் திரும்பி கிடைத்துள்ளதால் உரிமையாளர் மகிழ்ச்சியில் உள்ளார். இருப்பினும் தான் கொடுத்த புகாரை அவர் திரும்ப பெறப்போவதில்லை என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக தனது கடைக்கு இனி வரும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு (Appointment) செய்து விட்டு வருமாறு அந்த கடை உரிமையாளர் தனது இன்ஸ்டா பக்கதில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விலையுர்ந்த புடவைகளை திருடிய திருடர்கள் தொடர்பான சிசிடிவி காட்சியை இன்ஸ்டாவில் பதிவிட்டதன் எதிரொலியாக, திருடர்கள் திருடிய பொருட்களை திரும்பி கொடுத்துள்ள நிகழ்வு தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது.

banner

Related Stories

Related Stories