தமிழ்நாடு

+2 தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி.. இருசக்கர வாகனத்தில் வந்தபோது நேர்ந்த சோகம்-அதிர்ச்சி சம்பவம்

தேர்வு எழுத சென்ற மாணவி, உறவினருடன் வீடு திரும்பி கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தில் மாணவி மற்றும் உறவினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது தஞ்சாவூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

+2 தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி.. இருசக்கர வாகனத்தில் வந்தபோது நேர்ந்த சோகம்-அதிர்ச்சி சம்பவம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த 022 - 2023-ம் கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.

+2 தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி.. இருசக்கர வாகனத்தில் வந்தபோது நேர்ந்த சோகம்-அதிர்ச்சி சம்பவம்

அதில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் எனவும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

அந்த வகையில் 12-ம் வகுப்பு நேற்றும், 11-ம் வகுப்புக்கு இன்றும் பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதற்காக மாணவர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். 12-ம், 11-ம் வகுப்புகளுக்கு தற்போது தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தேர்வு முடித்து விட்டு உறவினருடன் பைக்கில் வரும்போது ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

+2 தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி.. இருசக்கர வாகனத்தில் வந்தபோது நேர்ந்த சோகம்-அதிர்ச்சி சம்பவம்

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே தாளக்குடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் விஷாலி. 17 வயதுடைய இந்த சிறுமி, அந்த பகுதியில் உள்ள பசுபதி கோவில் புனித கபிரியல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் மாணவி விஷாலி, நேற்று (13.03.2023) காலை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத சென்றார். தேர்வு முடிந்த பிறகு தனது உறவினரான தாளக்குடியைச் சேர்ந்த பிரதீப் (வயது 26) என்பவருடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

+2 தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி.. இருசக்கர வாகனத்தில் வந்தபோது நேர்ந்த சோகம்-அதிர்ச்சி சம்பவம்

அப்போது நல்லிச்சேரி பகுதியிலுள்ள பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, வாகனம் நிலை தடுமாறியது. இதில் அந்த வாகனம் சாலையோரத்தில் இருந்த மாமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பிரதீப் மற்றும் மாணவி விஷாலி தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

+2 தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி.. இருசக்கர வாகனத்தில் வந்தபோது நேர்ந்த சோகம்-அதிர்ச்சி சம்பவம்

இதையடுத்து சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்வு எழுத சென்ற மாணவி, உறவினருடன் வீடு திரும்பி கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தில் மாணவி மற்றும் உறவினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories