
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை, இன்று (ஆக.04) அவரது நீலாங்கரை வீட்டில் வைத்து பாசிச தவெக அரசின் ஏவுதலால், காவல்துறை கைது செய்தது.
இந்தக் கைது நடவடிக்கைக்கு காரணம் என, திமுக சார்பில் நேற்று தஞ்சாவூரில் விவசாய விரோதி தவெக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தவெக அரசை நோக்கி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்விக் கணைகளை தொடுத்ததில், இதனைக் தாங்கிக் கொள்ள பதிலளிக்க முடியாத தவெக அரசின் முதலமைச்சர் இந்தக் கைது நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளார்.
எதுவாக இருந்தாலும் சட்டப்படி எதிர்கொண்டு, அந்தப் பிரச்சனைகளுக்குக் சட்டத்தின் வாயிலாக நேர்மையான முறையில் தீர்வு கண்ட இயக்கம் திமுக. அதன்படியே, இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் வீட்டின் முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தது திமுக.
இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகலே மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொளவதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அப்போது, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் முன் பகல் 12 மணி வரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அறிவுறுத்தலை வழங்கியது.
ஆனால், இன்று காலை 10 மணிக்கு மேல் நீதிமன்ற உத்தரவையும் மீறி எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்து, தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றது பாசிச தவெக அரசின் காவல்துறை.
இதற்கிடையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில், விசாரணையை முடித்து இன்றே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை விடுவிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து மூத்த வழக்கறிஞர், திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவிக்கையில், “எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையும், அவரைக் கைது செய்த நடவடிக்கையும் சட்டத்திற்குப் புறம்பானது என்று நீதிமன்றத்தில் வாதிட்டோம். நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறி, தஞ்சாவூர் காவல்துறையினர் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்துள்ளனர். மேலும், விசாரணையின்போது காவல்துறையின் அப்பட்டமான அடக்குமுறையையும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினோம்.
சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை (ஆக.05) நடைபெறவுள்ள நிலையில், இன்றே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை காவல்துறையினர் தெரிந்தே மீறியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் நாளை சட்டமன்றத்திற்கு வரக்கூடாது என்ற நோக்கத்தில்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் ஒருமுறை, சட்டத்தின் மூலம் சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.”
தவெக அரசு கருத்துகளை கருத்துக்களாலும், கேள்விகளை தகுந்த பதில்களாலும் எதிர்கொள்ளாமல், பாசிச போக்கையும் அராஜகப் போக்கையும் கடைபிடித்து திமுக-வை அடக்கி விடலாம் என நினைத்தால், வீழ்ந்தே தீரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.






