இந்தியா

குஜராத் :சிகிச்சைக்கு வந்த இளைஞரை கட்டிவைத்து அடித்த ஊழியர்கள்.. இறுதியில் செய்த கோடூரத்தால் பறிபோன உயிர்

போதை மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்காக சென்ற இளைஞரை 8 பேர் சேர்ந்து அந்தரங்க உறுப்பில் பிளாஸ்டிக்கை உருக வைத்து ஊற்றி கொலை செய்துள்ள சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் :சிகிச்சைக்கு வந்த இளைஞரை கட்டிவைத்து அடித்த ஊழியர்கள்.. இறுதியில் செய்த கோடூரத்தால் பறிபோன உயிர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

குஜராத் மாநிலம் படான் பகுதியை அடுத்து ஜியோனா என்ற இடத்தில் போதை மறுவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் மேசானா என்ற பகுதியை சேர்ந்த ஹர்திக் சுதார் (25) என்ற இளைஞர் இங்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்த மறுவாழ்வு மையத்தில் சேர்ந்ததில் இருந்தே தன்னை வீட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறு மேலாளரிடம் கெஞ்சி கூத்தாடியுள்ளார். தொடர்ந்து சில தொந்தரவுகளையும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இங்கே சேர்ந்த சுதார், கடந்த மாதம் 17-ம் தேதி திடீரென உயிரிழந்து விட்டார். இதையடுத்து சுதாரின் மாமாவுக்கு மைய மேலாளர் தகவல் தெரிவித்தார்.

குஜராத் :சிகிச்சைக்கு வந்த இளைஞரை கட்டிவைத்து அடித்த ஊழியர்கள்.. இறுதியில் செய்த கோடூரத்தால் பறிபோன உயிர்

அப்போது தங்கள் மருமகன் இரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதனை நம்பிய சுதாரின் மாமாவும் அழுதுகொண்டே சடலத்தை மீட்டு மயானத்திற்கு சென்று எரித்தார். எந்த ஒரு பிரச்னையும் இன்றி சுதாரின் உடல் தகனம் செய்யப்பட்டாலும், இவரது மரணம் குறித்து காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் போதை மறுவாழ்வு மையம் சென்ற அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த இரகசிய கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது சுதாரின் இறப்பு ஒரு கொலை என்று தெரியவந்தது. அதாவது மையத்தில் இருந்த சுதார் தன்னை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு மையத்தின் மேலாளரிடம் முறையிட்டு வந்துள்ளார்.

குஜராத் :சிகிச்சைக்கு வந்த இளைஞரை கட்டிவைத்து அடித்த ஊழியர்கள்.. இறுதியில் செய்த கோடூரத்தால் பறிபோன உயிர்

ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தததால் கோபமடைந்த சுதார், சம்பவத்தன்று கழிவறை சென்று தனது கையிலுள்ள மணிக்கட்டை அறுத்துக்கொண்டார். இதனை அறிந்த சிகிச்சை மையத்தின் ஊழியர்கள் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து ஒரு அறையில் அடைத்துள்ளனர். சுதாரின் இந்த செயலால் எரிச்சலைடந்த மேலாளர் அவ்ருக்கு தக்க பாடம் புகுத்த வேண்டும் என எண்ணியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று அங்குள்ள ஊழியர்கள் சுதாரின் கை, கால்களை பிடித்து கட்டிபோட்டுள்ளனர். மேலும் தடியான பிளாஸ்டிக் பைப்பை எடுத்து சுமார் இரண்டு மணி நேரம் கொடூரமாக அவரை தாக்கியுள்ளார் மேலாளர். அதுமட்டுமின்றி அந்த பிளாஸ்டிக் பைப்பை சுதாரின் அந்தரங்க உறுப்பில் மாட்டி நெருப்பை பற்ற வைத்துள்ளனர்.

குஜராத் :சிகிச்சைக்கு வந்த இளைஞரை கட்டிவைத்து அடித்த ஊழியர்கள்.. இறுதியில் செய்த கோடூரத்தால் பறிபோன உயிர்

இதில் அந்த பிளாஸ்டிக் உருகி, அவரது உறுப்பில் விழுந்துள்ளது. இதில் அவர் துடிதுடித்து இறந்துள்ளார். இவை அனைத்தும் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. இதையடுத்து சுதாரின் மரணம் இயற்கையானது இல்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேலாளர் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

போதை மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்காக சென்ற இளைஞரை 8 பேர் சேர்ந்து அந்தரங்க உறுப்பில் பிளாஸ்டிக்கை உருக வைத்து ஊற்றி கொலை செய்துள்ள சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories