இந்தியா

“இதனால் இந்தியாவை வெறுக்கமாட்டேன்..” - டெல்லியில் பாலியல் தொல்லைக்கு ஆளான ஜப்பானிய பெண் உருக்கம் !

ஹோலி பண்டிகையில் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான ஜப்பானிய இளம்பெண், அந்த சம்பவம் குறித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

“இதனால் இந்தியாவை வெறுக்கமாட்டேன்..” - டெல்லியில் பாலியல் தொல்லைக்கு ஆளான ஜப்பானிய பெண் உருக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். வட இந்தியர்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் இந்த பண்டிகையானது வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த தண்ணீரை ஊற்றியும் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மார்ச் 8ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.

எங்கெல்லாம் வட மாநிலத்தவர்கள் உள்ளார்களோ அவர்கள் இந்த பண்டிகையை வண்ணப்பொடி தூவி கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் இந்தியாவிற்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் ஹோலி பண்டிகை அன்று டெல்லியில் உள்ள பகர்கஞ்ச் பகுதியில் அப்பகுதி மக்கள் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

“இதனால் இந்தியாவை வெறுக்கமாட்டேன்..” - டெல்லியில் பாலியல் தொல்லைக்கு ஆளான ஜப்பானிய பெண் உருக்கம் !

அப்போது அங்கு இருந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண் மீது வண்ணம் பூசினர். ஆனால் வண்ணம் பூசுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், அந்த பெண்ணின் உடல்களை தொட்டு 4,5 இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். அந்த பெண் அவர்கள் பிடியில் இருந்து விலக முயன்றபோதும் அவரை பிடித்து அவர் மீது வண்ணப்பொடி பூசி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான வீடியோ நேற்றைய முன்தினம் இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெளியான அந்த வீடியோவில், 4, 5 இளைஞர்கள் சேர்ந்து கொண்டு ஜப்பான் பெண்ணின் உடலில் கைவைத்து வண்ணம் பூசி அத்துமீறுகிறார்கள். மேலும் ஒருவர் அவரது தலையில் முட்டையைக் கொண்டு அடிக்கிறார். இவர்களிடம் இருந்து அப்பெண் தப்பித்து ஓடும் காட்சிப் பதிவாகியுள்ளது.

“இதனால் இந்தியாவை வெறுக்கமாட்டேன்..” - டெல்லியில் பாலியல் தொல்லைக்கு ஆளான ஜப்பானிய பெண் உருக்கம் !

இந்த வீடியோ வைரலானதை அடுத்து பலரும் இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தேசிய மகளிர் ஆணையமும் இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என டெல்லி போலிஸாருக்கு வலியுறுத்தியது.

இந்த வீடியோவை ஆதாரமாக வைத்துக் கொண்டு ஜப்பான் பெண்ணிடம் அத்துமீறிய 3 இளைஞர்களை போலிஸார் அடையாளம் கண்டு கைது நேற்று செய்துள்ளனர். இதில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட ஜப்பான் பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை என்றும் அவர் வங்காளதேசத்திற்குச் சென்றுவிட்டார் என்றும் போலிஸார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதனால் இந்தியாவை வெறுக்கமாட்டேன்..” - டெல்லியில் பாலியல் தொல்லைக்கு ஆளான ஜப்பானிய பெண் உருக்கம் !

இந்த நிலையில் நேற்று அந்த ஜப்பானிய இளம்பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் பங்கேற்ற இந்தியப் பண்டிகையான ஹோலிப் பண்டிகையில் ஒரு பெண் பகலில் தனியாக வெளியே செல்வது மிகவும் ஆபத்தானது என்று நான் கேள்விப்பட்டிருந்தேன். எனவே நான் மொத்தம் 35 நண்பர்களுடன் நிகழ்வில் பங்கேற்றேன்.

அசல் ஹோலி பண்டிகை ஒரு அற்புதமான மற்றும் வேடிக்கையான பாரம்பரிய பண்டிகையாகும். இது வசந்த காலத்தின் வருகையை ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகள் மற்றும் தண்ணீரை ஊற்றி, தோல் நிறம் அல்லது சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அதை அனுபவிக்கும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. (பல்வேறு கோட்பாடுகள் உள்ளன)

இந்த முறை இப்படி நடந்துள்ளது. எனவே சம்பவம் நடந்த அன்றே நான் இந்தியாவை விட்டு வெளியேறி வங்கதேசம் சென்றுவிட்டேன். நான் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன்; பல முறை இந்தியாவிற்கு வந்திருக்கிறேன். இது கண்கவர் நாடு. இதுபோன்ற ஒரு சம்பவம் நடத்திருப்பதால் நான் இந்தியாவை வெறுக்க மாட்டேன்; எப்போதும் நேசிப்பேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹோலி கொண்டாடப்பட்ட அதேநாளில்தான் மகளிர் தினமும் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் தான் ஜப்பான் பெண்ணுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories