இந்தியா

உஷார்! திருவிழாவுக்கு சென்ற இளம்பெண்.. வாயை பொத்தி 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை: சத்தீஸ்கரில் கொடூரம்!

திருவிழாவுக்கு சென்ற பெண்ணை கடத்தி 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது சத்தீஸ்கரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உஷார்! திருவிழாவுக்கு சென்ற இளம்பெண்.. வாயை பொத்தி 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை: சத்தீஸ்கரில் கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் என்ற பகுதியில் மாவலி பதர் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாவலி பதர் (mavlipadar) திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு, தற்போது நடைபெற்று வருகிறது. வழக்கமான திருவிழாபோல் இந்த திருவிழாவும் சில நாட்கள் நடைபெறும்.

உஷார்! திருவிழாவுக்கு சென்ற இளம்பெண்.. வாயை பொத்தி 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை: சத்தீஸ்கரில் கொடூரம்!
உஷார்! திருவிழாவுக்கு சென்ற இளம்பெண்.. வாயை பொத்தி 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை: சத்தீஸ்கரில் கொடூரம்!

இதில் நாடகம், பாட்டுக் கச்சேரி, பட்டிமன்றம் என அனைத்தும் அரங்கேறும். இதனை காண அக்கம் பக்கம் ஊர்களில் இருந்தும் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த திருவிழாவை காண வெளியூர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருகை தருவர். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை இரவு இங்கு நாடகப்போட்டி நடைபெற்றது.

உஷார்! திருவிழாவுக்கு சென்ற இளம்பெண்.. வாயை பொத்தி 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை: சத்தீஸ்கரில் கொடூரம்!

இதனை காண பலரும் வருகை தந்தனர். அப்போது 24 வயதுடைய இளம்பெண் ஒருவர், அவரது உறவினர் முறை 20 வயது சகோதரருடன் அங்கே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்த நேரத்தில், கும்பல் ஒன்று அங்கு வந்துள்ளது. அப்போது அவர்கள் இந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொள்ள பார்த்துள்ளனர்.

தொடர்ந்து அவருடன் வந்த சகோதரனையும் பயமுறுத்தவே, அவர் அங்கிருந்து ஓடி விட்டார். இந்த பெண்ணும் தம்பி பின்னால் செல்ல முயன்றபோது, அவர்கள் அவரை மடக்கி அவரது வாயை பொத்தி காட்டு பகுதிக்கு தூக்கி சென்றனர். அங்கே அவரை 7 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தன்னை மீட்கும் போராட்டத்தில், அந்த பெண் மயக்க நிலையை அடைந்தார்.

உஷார்! திருவிழாவுக்கு சென்ற இளம்பெண்.. வாயை பொத்தி 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை: சத்தீஸ்கரில் கொடூரம்!

தொடர்ந்து அவர் மயக்க நிலையில் இருந்து எழுந்த பின் தனது வீட்டிற்கு சென்று குடும்பத்தாரிடம் நடந்தவற்றை அழுதுகொண்டே கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் அருகிலிருந்த காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதனால் இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

உஷார்! திருவிழாவுக்கு சென்ற இளம்பெண்.. வாயை பொத்தி 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை: சத்தீஸ்கரில் கொடூரம்!

தொடர்ந்து விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், அந்த பெண்ணுக்கு நன்கு தெரிந்தவர்கள் என்றும் தெரியவந்தது. அதோடு இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் 17 வயதுடைய சிறுவன் என்றும் தெரியவந்தது. இதையடுத்து அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், சிறுவனை சிறார் பள்ளியிலும், மீதமுள்ளவர்களை சிறையிலும் அடைத்தனர்

திருவிழாவுக்கு சென்றபோது, தெரிந்தவர் மூலமாகவே இளம்பெண் கடத்தப்பட்டு 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் சத்தீஸ்கரில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories