இந்தியா

டெல்லி :கணவர் கண்முன்பே குழந்தையுடன் கடத்தப்பட்ட இளம்பெண்..கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்!

ஆட்டோவில் கடத்தி சென்று இளம்பெண் ஒருவர் 4 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி :கணவர் கண்முன்பே குழந்தையுடன் கடத்தப்பட்ட இளம்பெண்..கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெல்லி மாநகரில் உள்ள விகாஸ்புரி என்னும் இடத்தில் மியான்மர் நாட்டை சேர்ந்த பெண் அகதி (வயது 21)தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. அந்த பெண்ணுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது.

இதனால் கடந்த மாதம் 22ம் தேதி தனது கணவருடன் அந்த பெண் காளிந்தி கஞ்ச் எந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு தனது குழந்தையோடு சென்றுள்ளார். மருத்துவமனையில் பரிசோதனை முடிவடைந்த நிலையில் இரவு 9.30 மணியளவில் அவர்கள் அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்துள்ளனர்.

டெல்லி :கணவர் கண்முன்பே குழந்தையுடன் கடத்தப்பட்ட இளம்பெண்..கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்!

அப்போது அந்த பெண்ணின் கணவர் கழிவறைக்கு சென்ற நேரத்தில் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அந்த பெண்ணின் வாயில் துணியை கட்டி அந்த பெண் வைத்திருந்த குழந்தையோடு அவரை ஆட்டோவுக்குள் இழுத்துள்ளார்.

பின்னர் விரைவாக ஆட்டோவை இயக்கி ஆள் இல்லாத இடத்துக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று இது குறித்து தனது நண்பர்களுக்கும் தகவல் அளித்துள்ளார். அதன்படி அந்த இடத்துக்கு அவரின் நண்பர்கள் 3 பேர் வந்தநிலையில், அனைவரும் இணைந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

டெல்லி :கணவர் கண்முன்பே குழந்தையுடன் கடத்தப்பட்ட இளம்பெண்..கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்!

இந்த கொடூர செயல் காரணமாக அந்த பெண் அதே இடத்தில் மயக்கமடைந்துள்ளார். அடுத்த நாள் அந்த பகுதி வழியாக சென்றவர்கள் அந்த பெண்ணை பார்த்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், போலிஸாருக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதற்காக மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காமெராக்களை போலிஸார் சோதனையிட்டு வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை என போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories