இந்தியா

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி.. உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்.. டெல்லியில் அதிர்ச்சி !

14 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், அதற்கு அந்த சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி.. உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்.. டெல்லியில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெல்லியின் நியூ அசோக் நகர் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்துவந்துள்ளார். சிறிது நாட்களுக்கு முன்னர் சிறுமியின் தாய் அந்த சிறுமியை படப்பிடிப்பு ஒன்றுக்கு அழைத்துச்செல்வதாக பட்பர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலுக்கு கூட்டிசென்றுள்ளார்.

அங்கு அறை எடுத்து இருவரும் தங்கிய நிலையில், அவர்களின் அறைக்கு சிறுமியின் தாய்க்கு தெரிந்த ஒருவர் வந்துள்ளார். பின்னர் மூவரும் அதே அறையில் இருந்த நிலையில், அந்த இளைஞர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி.. உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்.. டெல்லியில் அதிர்ச்சி !

அப்போது சிறுமியின் வாயில் துணியை வைத்து திணித்து, அவருக்கு அந்த இளைஞர் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். மேலும், தொடர்ந்து சிறுமியை பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும், இதை யாரிடமும் கூறக்கூடாது என்றும் மிரட்டி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சிறுமி இந்த கொடூர சம்பவம் குறித்து தனது தாத்தாவிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி.. உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்.. டெல்லியில் அதிர்ச்சி !

மேலும், இந்த வழக்கில் சிறுமியின் தாயாரையும் போலிஸார் கைது செய்து அந்த இளைஞர் தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். இருவர் மீதும் கூட்டுப் பலாத்காரம், போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள அந்த இளைஞரை போலிஸார் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories