இந்தியா

தொடரும் விபரீதம் : பாம்புடன் முதல் செல்ஃபி.. கடைசி செல்ஃபியாக மாறிய சோகம்.. ஆந்திராவில் அதிர்ச்சி !

பாம்புடன் இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் விபரீதம் : பாம்புடன் முதல் செல்ஃபி.. கடைசி செல்ஃபியாக மாறிய சோகம்.. ஆந்திராவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள காலகட்டத்தில் மொபைல் போன்கள் மோகம் இளைஞர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. அதிலும் ஏகப்பட்டவர்கள் எங்கே சென்றாலும், எதனை கண்டாலும் செல்பி எடுக்கதான் முனைப்பு காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுப்பது, ஆபத்தான மிருகங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது, என பல சாகசங்களை இளைஞர்கள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இதுபோன்ற ஒரு சாகசத்தை செய்த இளைஞர் தனது உயிரையே இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் விபரீதம் : பாம்புடன் முதல் செல்ஃபி.. கடைசி செல்ஃபியாக மாறிய சோகம்.. ஆந்திராவில் அதிர்ச்சி !

ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். 24 வயதுடைய இளைஞரான இவர், நண்பர்களுடன் ஊர் சுற்றுவதும், அரட்டை அடிப்பதும் வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்றும் அதே போல், இவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து சாலையில் இருந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக பாம்புகள் வைத்து வித்தை காட்டுபவர் சென்றுள்ளார். இதனை கண்ட அவர்கள் உடனே அவரிடம் சென்று பேச்சு கொடுத்தனர். அப்படியே அவர் வைத்திருக்கும் பாம்புகளை எடுத்து காட்டும்படி அனைவரும் வற்புறுத்தியுள்ளனர். எனவே அவரும் தான் வைத்திருந்த பாம்புகளில் ஒன்றை எடுத்து காட்டியுள்ளார்.

தொடரும் விபரீதம் : பாம்புடன் முதல் செல்ஃபி.. கடைசி செல்ஃபியாக மாறிய சோகம்.. ஆந்திராவில் அதிர்ச்சி !

இதனை கண்ட ஜெகதீஷ், அந்த பாம்புடன் ஒரு போட்டோ எடுக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி பாம்பை தனது தோள்களில் வைத்து கொண்டு செல்பி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் தோளின் மீது இருந்த பாம்பு திடீரென ஜெகதீஷின் கையில் கொத்தியது. இதில் அலறிய அவர், உடனே தனது நண்பர்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து பதறிப்போன நண்பர்கள், உடனே ஜெகதீஷை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கே அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடரும் விபரீதம் : பாம்புடன் முதல் செல்ஃபி.. கடைசி செல்ஃபியாக மாறிய சோகம்.. ஆந்திராவில் அதிர்ச்சி !

பாம்புடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவரை அதே பாம்பு கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இதேபோல், பாம்புக்கு முத்தமிட்டபோது உதட்டில் பாம்பு கடித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

அதோடு இதே போல் கழுத்தை சுற்றியும், கைகளால் பிடித்தபோதும், பாம்பை விரட்ட முயன்றபோதும், பலரையும் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ள சம்பவம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories