இந்தியா

ஓடும் பேருந்தில் தவறான நடத்தை.. வீடியோ எடுத்த பெண்ணிடம் கதறி அழுத இளைஞர்.. டெல்லியில் அதிர்ச்சி !

ஓடும் பேருந்தில் பெண்ணின் முன் சுயஇன்பம் செய்த நபரை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட பெண்ணின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஓடும் பேருந்தில் தவறான நடத்தை.. வீடியோ எடுத்த பெண்ணிடம் கதறி அழுத இளைஞர்.. டெல்லியில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், ஓடும் பேருந்துகளில் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக புகார்களும் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று டெல்லியின் ரோஹிணி பகுதியில் டெல்லி மாநகர பேருந்தில் இளம்பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்தில் பெரிய அளவில் கூட்டம் இல்லாத நிலையில், அந்த பெண்ணின் முன் நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார்.

ஓடும் பேருந்தில் தவறான நடத்தை.. வீடியோ எடுத்த பெண்ணிடம் கதறி அழுத இளைஞர்.. டெல்லியில் அதிர்ச்சி !

அந்த பெண்ணை நோக்கி அவர் சுயஇன்பம் செய்ததாக கூறப்படும் நிலையில், இதனை அறிந்த அந்த பெண் அங்கிருந்த மார்ஷல் சந்தீப் சகரா என்ற நபரிடம் இதனை குறிப்பால் உணர்த்த அவர் அந்த இளைஞரின் மோசமான செயலை வீடியோ எடுத்துள்ளார்.

தான் கையும் களவுமாக மாட்டியதை உணர்ந்த அந்த இளைஞர் அந்த பெண்ணிடம் இதை மன்னித்து விட்டுவிடுமாறு கதறி அழுத நிலையில், அதையும் அவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதன் பின்னர் டெல்லி காவல்துறை சார்பில் அந்த பெண்ணிடம் புகாரளிக்க கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அவர் மறுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த இளைஞர் பீகாரை சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories