இந்தியா

பூஜை நடத்துவதாக கூறி 55 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணத்தை சுருட்டிய பெண் மந்திரவாதி: கேரளாவில் பகீர்!

கேரளாவில் பரிகார பூஜை நடத்துவதாகக் கூறி வீட்டிலிருந்த 55 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் பணத்தைப் பெண் மந்திரவாதி திருடிச் சென்றுள்ளார்.

பூஜை நடத்துவதாக கூறி 55 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணத்தை சுருட்டிய பெண் மந்திரவாதி: கேரளாவில் பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வாம்பரன். இவரது குடும்பத்தில் அடுத்தடுத்து சிலர் உயிரிழந்துள்ளனர். இதனால் இவர் குடும்பத்திற்கு ஏதாவது தோஷம் இருக்குமோ என நினைத்து ஜோதிடர் ஒருவரைச் சந்தித்துள்ளார்.

அப்போது, சில பரிகார பூஜை நடத்தினால் எல்லாம் சரியாகிவிடும். கன்னியாகுமரியில் உள்ள பெண் மந்திராவாதி வித்யா என்பவர் பரிகார பூஜை நடத்துவார். அவரை சந்தியுங்கள் என கூறியுள்ளார். அதேபோல் விஸ்வாம்பரனும் மந்திரவாதியை நேரில் சந்தித்துள்ளார்.

பூஜை நடத்துவதாக கூறி 55 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணத்தை சுருட்டிய பெண் மந்திரவாதி: கேரளாவில் பகீர்!

அப்போது வித்யா, 'உங்கள் வீட்டில் வைத்துதான் பூஜைகள் நடத்த வேண்டும்' என கூறியுள்ளார். பிறகு சில நாட்களுக்குப் பிறகு விஸ்வாம்பரன் வீட்டிற்குத் சில ஆட்களுடன் வித்யா வந்துள்ளார். அங்கு ஒரு வாரம் தங்கி பூஜை செய்து விட்டு சென்றுள்ளார்.

பிறகு மந்திரவாதி, "பூஜை நடத்தியும் சாபம் எதுவும் போகவில்லை, வீட்டில் உள்ள அனைத்து நகைகளை வைத்து பூஜை செய்ய வேண்டும்" என கூறியுள்ளார். இதை நம்பிய அவரும் பூஜையின் போது 55 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணத்தை வைத்துள்ளார்.

பூஜை நடத்துவதாக கூறி 55 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணத்தை சுருட்டிய பெண் மந்திரவாதி: கேரளாவில் பகீர்!

பின்னர் மந்திரவாதி, "பூஜை அறையில் உள்ள பீரோவில் நகை, பணத்தை வைத்து ஒருவாரத்திற்குப் பிறகு திறக்க வேண்டும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் ஒருவாரம் கழித்து பீரோவைத் திறக்கலாமா? என மந்திரவாதியிடம் விஸ்வாம்பரன் கேட்டுள்ளார்.

இதற்கு அவர் 'ஒரு வருடம் கழித்துத் திறந்தால்தான் சாபம் போகும்' என கூறியுள்ளார். இதனால் மந்திரவாதியின் பேச்சு மீது சந்தேகம் எழுந்தது. பிறகு பீரோவைத் திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளும் திருடப்பட்ட தெரியவந்தது.

இது குறித்து மந்திரவாதியிடம் கேட்டபோது, 'நகைகள் குறித்து போலிஸாரிடம் கூறினால் குடும்பத்தையே கொன்று விடுவோம்' என மிரட்டியுள்ளார். இதையடுத்து விஸ்வாம்பரன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி பெண் மந்திரவாதியைத் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories