இந்தியா

ராணுவ வீரர்களுக்கு கொண்டு சென்ற 4000 முட்டைகள் திருட்டு... ஆட்டோ ஓட்டுநரை தேடி வரும் ம.பி போலிஸ்!

மத்திய பிரதேசத்தில் ராணுவ வீரர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 4000 முட்டைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ வீரர்களுக்கு கொண்டு சென்ற 4000 முட்டைகள் திருட்டு... ஆட்டோ ஓட்டுநரை தேடி வரும் ம.பி போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாம் பணம், தங்கம், வள்ளி, வைரம், கார், பைக் என பல விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்ட சம்பவங்கள் குறித்து கேள்விப் பட்டிருப்போம். ஆனால் மத்திய பிரதேசத்தில் 4000 முட்டைகள் திருடப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் ராணுவ கன்டோன்மென்ட் மெஸ் உள்ளது. இங்கு வீரர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக உணவுப் பொருட்களை நிஜாமுதீன் கான் என்பவர் விநியோகம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் வழக்கம்போல், சந்தையில் இருந்து 4000 முட்டைகளை வாங்கியுள்ளார். பிறகு இந்த முட்டைகளை ஒரு லோடு ஆட்டோவில் ஏற்றி தனக்குப் பின்னால் வரும்படி கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

ராணுவ வீரர்களுக்கு கொண்டு சென்ற 4000 முட்டைகள் திருட்டு... ஆட்டோ ஓட்டுநரை தேடி வரும் ம.பி போலிஸ்!

இவர் முன்னால் சென்ற போது ஓரிடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ பின்னால் வருவதை நிஜாமுதீன் கான் கவனிக்காமல் விட்டுள்ளார். பின்னர் சில மணிநேரம் ஆகியும் ஆட்டோ பின்னால் வராததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து அதே இடத்தில் நீண்ட நேரம் ஆகியும் ஆட்டோ வரவில்லை. பிறகுதான் ஆட்டோ ஓட்டுநர் 4000 முட்டைகளுடன் மாயமானதை அவர் உணர்ந்துள்ளார். பிறகு இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ராணுவ வீரர்களுக்கு கொண்டு சென்ற 4000 முட்டைகள் திருட்டு... ஆட்டோ ஓட்டுநரை தேடி வரும் ம.பி போலிஸ்!

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் ஆட்டோவில் முட்டையை ஏற்றி வந்தது முரார் பகுதியைச் சேர்ந்து முகேஷ் சர்மா என்பது தெரியவந்தது. தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ராணுவ வீரர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 4000 முட்டைகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories