இந்தியா

ஆசி வாங்கவந்த பாஜக எம்.பியை எட்டி உதைத்த பசு.. மனம் தளராமல் இரண்டாம் முறையும் வந்து உதை வாங்கிய சோகம் !

ஆசி வாங்கவந்த பாஜக எம்.பியை பசு ஒன்று எட்டி உதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசி வாங்கவந்த பாஜக எம்.பியை எட்டி உதைத்த பசு.. மனம் தளராமல் இரண்டாம் முறையும் வந்து உதை வாங்கிய சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்.பியாக இருப்பவர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ். ஆந்திராவை சேர்ந்த இவர் ஆந்திராவின் குண்டூரில் உள்ள மார்க்கெட் யார்டில் மிளகாய் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அதன்பின்னர் அங்குள்ள பசு, மற்றும் எருதுகளை வைத்திருக்கும் இடத்துக்கு சென்று அங்குள்ள பசு ஒன்றிடம் ஆசி வாங்க முயற்சி செய்துள்ளார். அப்போது பாஜக எம்.பியை கண்டு அச்சம் அடைந்த முதல் முறை அவரை எட்டி உதைத்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆசி வாங்கவந்த பாஜக எம்.பியை எட்டி உதைத்த பசு.. மனம் தளராமல் இரண்டாம் முறையும் வந்து உதை வாங்கிய சோகம் !

எனினும் மனம் தளராத எம்.பி இரண்டாம் முறையாகும் பசுவிடம் ஆசிவாங்க சென்ற நிலையில் இரண்டாம் முறையில் அவரை காலால் எட்டி உதைத்துள்ளது. அதன்பின்னர் பசுவை கண்டு அஞ்சிய அவர் கையெடுத்து கும்பிட்டு விட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பியுள்ளார்.

இது தொடர்பாக வீடியோ இணையதளத்தில் வெளியான நிலையில், அது வைரலாகியுள்ளது. பாஜகவின் முக்கிய நபர்கள் பசுவை புனிதமாக கருதி அதனை வழிபட்டு வருகின்றனர். அதிலும் பலர் அதன் சிறுநீரையும் குடித்து மற்றவர்களும் அதனை குடிக்கவேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர்.

அதிலும் பாஜக ஆளும் மாநிலங்களில் பசுவை கடத்தியதாக பட்டியலின மக்கள் மற்றும் சிறுபான்மையினரை கொடூரமாக தாக்கி வருவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பாஜகவினரின் அத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories