இந்தியா

கணவருக்கு வேறு பெண்ணோடு தொடர்பு.. சோகத்தில் குழந்தைகளோடு அவசர முடிவெடுத்த மனைவி.. கர்நாடகாவில் சோகம் !

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்த பெண்ணின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவருக்கு வேறு பெண்ணோடு தொடர்பு.. சோகத்தில் குழந்தைகளோடு அவசர முடிவெடுத்த மனைவி.. கர்நாடகாவில் சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஹலேபேடி பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் பவர் அகில் அகமது- உஸ்னா கவுசர் (வயது 30). இந்த தம்பதிக்கு ஹரீஸ் (வயது 7),அலிஷா (வயது 4),அனம் பாத்திமா (வயது 2) என மூன்று குழந்தைகள் இருக்கின்றன.

அகில் அகமது சில வருடங்களாக சென்னப்பட்டணா என்னும் இடத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த நிலையில், அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருக்கும் தொடர்ந்து தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இது தொடர்பாக புகைப்படத்தை அகில் அகமது தனது மொபைலில் எடுத்துவைத்துள்ளார்.

கணவருக்கு வேறு பெண்ணோடு தொடர்பு.. சோகத்தில் குழந்தைகளோடு அவசர முடிவெடுத்த மனைவி.. கர்நாடகாவில் சோகம் !

விடுமுறைக்காக அகில் அகமது தனது வீட்டுக்கு வந்திருந்தபோது அவரது மனைவி உஸ்னா கவுசர் கணவரின் மொபைலை எடுத்து பார்த்தபோது அதில் கணவர் மற்றோர் பெண்ணோடு இருக்கும் புகைப்படங்கள் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தனது கணவரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.

அப்போதுதான் கணவருக்கு மற்றொரு பெண்ணோடு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் மனைவி உஸ்னா கவுசர் மனஉளைச்சலில் இருந்துள்ளார். மேலும், கணவர் -மனைவி இடையே அடிக்கடி சண்டையும் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் இறுகுடும்பத்தாருக்கும் தெரியவந்த நிலையில், அவர்கள் சமாதானப்படுத்தி வந்துள்ளனர்.

கணவருக்கு வேறு பெண்ணோடு தொடர்பு.. சோகத்தில் குழந்தைகளோடு அவசர முடிவெடுத்த மனைவி.. கர்நாடகாவில் சோகம் !

இந்த நிலையில், சம்பவத்தன்று கணவர் -மனைவி இடையே மீண்டும் சண்டை வெடித்த நிலையில், உஸ்னா கவுசர், குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி தனது குழந்தைகளுக்கு உணவில் விஷத்தை கலந்து கொடுத்தவர், அதன்பின்னர் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். வீடு நெடு நேரம் திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டை உடைத்து பார்த்தபோது இந்த கொடிய சம்பவம் தெரியவந்துள்ளது.

உடனடியாக அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்த நிலையில், அவர்கள் விரைந்து வந்த நால்வரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தியதில் கணவர் தலைமறைவாகியுள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலிஸார் அவரை தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories