இந்தியா

அமெரிக்க பேராசிரியரிடம் ஆபாச Chat .. காதலனோடு சேர்ந்து மிரட்டி ரூ.39 லட்சம் பணம் பறித்த டெல்லி இளம்பெண் !

டெல்லியில் இருந்து அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியரிடம் ஆபாசமாக பேசி பழகி, அவரது அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க பேராசிரியரிடம் ஆபாச Chat .. காதலனோடு சேர்ந்து மிரட்டி ரூ.39 லட்சம் பணம் பறித்த டெல்லி இளம்பெண் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் ஆசிரியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். சமூக வலைதளங்களை அதிகம் கையாளும் இவர், முகநூல் பக்கத்தில் நேரத்தை அதிகமாக செலவிட்டு வந்துள்ளார்.

அப்போது டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் இவரிடம் முகநூல் மூலம் நட்பு பாராட்டியுள்ளார். பிறகு நாள்தோறும் இவர்கள் பேசி வந்துள்ளனர். இவர்களது பேச்சு ஆபாசத்தை நோக்கி சென்றது. அப்போது Sexual ஆக பேசத்தொடங்கிய இவர்கள் ஆபாச புகைப்படங்களையும் மாற்றி மாற்றி அனுப்பி கொண்டனர். இதைத்தொடர்ந்து அந்த பெண், பேராசிரியரின் நிர்வாண அந்தரங்க வீடியோ போட்டோக்களை கேட்டுள்ளார்.

அமெரிக்க பேராசிரியரிடம் ஆபாச Chat .. காதலனோடு சேர்ந்து மிரட்டி ரூ.39 லட்சம் பணம் பறித்த டெல்லி இளம்பெண் !

இவரும் அந்த பெண்ணுக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்த பெண், பேராசிரியரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் இதனை அனுப்பவில்லை என்றால், பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகக் கூறி வீடியோக்களை வெளியிட்டுவிடுவதாக மிரட்டல் விடுக்க தொடங்கியுளளார். மேலும் இதற்கு அந்த பெண்ணின் காதலன் ராகுல் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதையடுத்து வேறு வழி தெரியாத பேராசிரியரும் அவர்கள் கேட்கும் பணத்தை எல்லாம், PayPal ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் அனுப்பியுள்ளார். அதோடு அவர்கள் கேட்கும்போதெல்லாம் ஐ-போன், இயர் - போன் உள்ளிட்ட உபகரணங்களையும் வெளிநாட்டில் இருந்து வாங்கி அனுப்பி வந்துள்ளார். இப்படியே சுமார் 39 லட்சம் வரை அந்த கும்பல் பேராசிரியரிடம் இருந்து பறித்துள்ளது.

அமெரிக்க பேராசிரியரிடம் ஆபாச Chat .. காதலனோடு சேர்ந்து மிரட்டி ரூ.39 லட்சம் பணம் பறித்த டெல்லி இளம்பெண் !

நாளுக்கு நாள் இவர்கள் தொல்லை அதிகரித்து போகவே, பொறுமை இழந்த பேராசிரியர் இந்த சம்பவம் குறித்து அந்நாட்டின் விசாரணை அமைப்பான FBI-யிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட அவர்கள் இது தொடர்பாக இந்திய புலனாய்வு அமைப்பான CBI-யிடம் தொடர்பு கொண்டு தெரிவித்துளளது.

இதைத்தொடர்ந்து டெல்லி அசோலா என்ற பகுதியில் இருந்த ராகுலை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் தற்போது தலைமறைவாக இருக்கும் ராகுலின் காதலியை தீவிரமாக தேடி வருகின்றனர். டெல்லியில் இருந்து அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியரிடம் ஆபாசமாக பேசி பழகி, அவரது அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Karnataka Incident Accused Manjula
Karnataka Incident Accused Manjula

முன்னதாக கர்நாடகாவில், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை எடிட் செய்து முகநூல் DP-யாக வைத்து காதல் வலை வீசி இளைஞர் ஒருவரிடம் இருந்து 40 லட்சம் பணம் பறித்த இரண்டு குழந்தைகளின் தாயை காவல்துறை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories