இந்தியா

” 10 மாதமாகத் தொடரும் பா.ஜ.கவின் எரிபொருள் கொள்ளை ”: மல்லிகார்ஜுன் கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பா.ஜ.கவின் எரிபொருள் கொள்ளையே காரணம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

” 10 மாதமாகத் தொடரும் பா.ஜ.கவின் எரிபொருள் கொள்ளை ”: மல்லிகார்ஜுன் கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்ததில் இருந்தே தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டு துவக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு ரூ.100க்கு மேல் பல மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டது.இதனால் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மேலும் மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

” 10 மாதமாகத் தொடரும் பா.ஜ.கவின் எரிபொருள் கொள்ளை ”: மல்லிகார்ஜுன் கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்த விலை ஏற்றத்திற்கு எல்லாம் சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்றமே காரணம் என மோடி அரசாங்கம் கூறியது. ஆனால், கடந்த 10 மாதங்களாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 25% வரை குறைந்துள்ளது. ஆனால் மோடி அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், "கடந்த 6 மாதங்களில் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை 25% வரை குறைந்துள்ளது. ஆனால் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரு ரூபாயைக் கூட குறைக்கவில்லை" என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவும் மோடி அரசாங்கத்தின் 'எரிபொருள் கொள்ளை' என விமர்சித்துள்ளார். மேலும் தனது ட்விட்டரில் புள்ளி விவரம் ஒன்றையும் மல்லிகார்ஜூன் கார்கே வெளியிட்டுள்ளார்.

அதில், “மே 16, 2014 அன்று (டெல்லி)

ஒரு பீப்பாய் கச்சா 107.09 அமெரிக்க டாலர்.

பெட்ரோல் - ₹71.51

டீசல் - ₹57.28க்கு விற்கப்பட்டது.

டிசம்பர் 1, 2022 அன்று

ஒரு பேரலுக்குக் கச்சா எண்ணெய் 87.55 அமெரிக்க டாலர்கள்.

பெட்ரோல் - ₹96.72.

டீசல் - ₹89.62க்கு விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் 10 மாதங்களில் குறைந்துள்ளது. ஆனால் பா.ஜ.க-வின் கொள்ளை அதிகமாகவே உள்ளது. தனது எரிபொருள் கொள்ளையை பா.ஜ.க நிறுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories