இந்தியா

குடித்துவிட்டு பள்ளி வகுப்பறையில் ஹாயாக குறட்டை விட்டுத் தூக்கிய Principal: மகாராஷ்டிராவில் அவலம்!

மகாராஷ்டிராவில் பள்ளி தலைமை ஆசிரியர் குடித்துவிட்டு மதுபோதையில் வகுப்பறையிலேயே தூங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

குடித்துவிட்டு பள்ளி வகுப்பறையில் ஹாயாக குறட்டை விட்டுத் தூக்கிய Principal: மகாராஷ்டிராவில் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வட மாநிலங்களில் பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியர்கள் மது குடித்து விட்டு பாடம் எடுக்கும் வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருநானக் தேவ் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் குடித்து விட்டு மாணவர்கள் முன்னிலையில் பாட்டுப்பாடி நடனமாடிய வீடியோ வைரலானது.

அதேபோல் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் குடித்து விட்டு வகுப்பறையிலேயே தூங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதேபோன்று மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் குடித்து விட்டு வகுப்பறையில் தூங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடித்துவிட்டு பள்ளி வகுப்பறையில் ஹாயாக குறட்டை விட்டுத் தூக்கிய Principal: மகாராஷ்டிராவில் அவலம்!

அந்த வீடியோவில், தலைமை ஆசிரியர் சட்டையைக் கழற்றிவிட்டு பனியனுடன் வகுப்பறையில் படுத்துத் தூங்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories