சினிமா

FACT CHECK : நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. உண்மையான தகவல் என்ன?

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

FACT CHECK : நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. உண்மையான தகவல் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்த் திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் பிரபல தெலுங்கு திரை நட்சத்திரமான நாக சைதன்யாவை காதலித்துக் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். சுமுகமாக இருந்த இவர்களது உறவு கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து இருவரும் பறிந்து தனித்தனி வாழ்க்கையில் சினிமா, சீரிஸ் என்று மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர்.

FACT CHECK : நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. உண்மையான தகவல் என்ன?

இந்நிலையில் இவரது நடிப்பில் நவம்பர் 11-ம் தேதி பான் இந்தியா படமாக 'யசோதா' வெளியானது. இதற்கிடையில் இந்த திரைப்படம் டப்பிங் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது தனக்கு மயோசிடிஸ் (Myositis) என்ற ஆட்டோ இம்யூனே பிரச்னை (autoimmune disorder) உள்ளதாகத் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதோடு தான் இதற்குத் தொடர் சிகிச்சை எடுத்து வருவதாகவும், விரைவில் குணமடைந்து விடுவதாகவும் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைத்து அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். 'யசோதா' படத்திற்காகப் பேட்டி ஒன்று கொடுத்தபோது நடிகை சமந்தா, "வாழ்க்கையில் சில நல்ல நாட்களும் உண்டு, சில மோசமான நாட்களும் உண்டு. என் உயிருக்கு ஆபத்து என பலர் சொல்கிறார்கள். நான் சாகற நிலைமையில் இல்லை. 3 மாதம் சிகிச்சை எடுத்துக்கொண்டதில் கொஞ்சம் குணமடைந்திருக்கிறேன். இந்த நோயிலிருந்து போராடி மீண்டு வருவேன். " என்று கண்கலங்கியபடியே கூறினார்.

FACT CHECK : நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. உண்மையான தகவல் என்ன?

இந்நிலையில் நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மையோசிடிஸ் நோய்க்குச் சிகிச்சை பெறுவதற்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளியான சில மணி நேரத்திலேயே அவரது செய்தி தொடர்பாளர், 'நடிகர் சமந்தா குறித்து வெளியாகியுள்ள தகவல் வதந்தி இதை யாரும் நம்ப வேண்டாம்' என தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகை சமந்தா ஐதராபாத்திலுள்ள அவரது வீட்டில் ஓய்வில் இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி என்ற வெளியான செய்தி வதந்தி என தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories