இந்தியா

2-ம் திருமணம் செய்தவரை சிறுநீர் குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்திய கிராம பஞ்சாயத்து - ராஜஸ்தானில் அவலம் !

முதல் மனைவியை விட்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நபரை சிறுநீர் அருந்த சொல்லி கட்டயப்படுத்திய கிராமத்தினரின் செயல் ராஜஸ்தானில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

2-ம் திருமணம் செய்தவரை சிறுநீர் குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்திய கிராம பஞ்சாயத்து - ராஜஸ்தானில் அவலம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முதல் மனைவியை விட்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நபரை சிறுநீர் அருந்த சொல்லி கட்டயப்படுத்திய கிராமத்தினரின் செயல் ராஜஸ்தானில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் காபி, மாதேஜபுரா பகுதியில் நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் ஆணாக சில ஆண்டுகள் வசித்தது வந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு இவர் மீது இவரது மனைவி வரதட்சணை கொடுமை செய்வதாக புகார் அளித்துள்ளார்.

இதனால் இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே பெரிதாக பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனது மனைவியை விவாகரத்து செய்யாமல், இந்த நபர் வேறொரு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.

2-ம் திருமணம் செய்தவரை சிறுநீர் குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்திய கிராம பஞ்சாயத்து - ராஜஸ்தானில் அவலம் !

இதனால் மிகுந்த கோபத்தில் இருந்த முதல் மனைவியின் குடும்பத்தினர், அந்த நபரிடம் பேச வேண்டும் என்று கூறி கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி பியாடி என்ற கிராமத்திற்கு அழைத்துள்ளனர். அதன்படி அவரும், அவரது இரண்டாவது மனைவியும் வந்துள்ளனர். அங்கே வைத்து முதல் மனைவியின் குடும்பத்தினர் இவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் அவர்களை வலுக்கட்டாயமாக மாதோராஜ்புரா என்ற பகுதிக்கும் அழைத்து சென்றுள்ளனர். அங்கே அவர்களை அவமதிக்கும் விதமாக அந்த ஊர் மக்கள் இரண்டு பெருக்கும் செருப்பு மாலை அணிவித்து துன்புறுத்தியுள்ளனர்.

2-ம் திருமணம் செய்தவரை சிறுநீர் குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்திய கிராம பஞ்சாயத்து - ராஜஸ்தானில் அவலம் !

மேலும் அவர்களை மனித சிறுநீர் குடிக்க வற்புறுத்தியுள்ளனர். அதோடு முதல் மனைவியை விட்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு ரூ.45,000 அபாரதமும் விதித்து தீர்ப்பளித்தனர். ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

அப்போது இது பெரிதாக வெளிவரவில்லை என்றாலும், கிராமத்தினரின் இந்த கொடூர நடவடிக்கை தொடர்பான வீடியோ தற்போது வேகமாக வைரலாகி பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கண்டனங்கள் வலுத்தது.

2-ம் திருமணம் செய்தவரை சிறுநீர் குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்திய கிராம பஞ்சாயத்து - ராஜஸ்தானில் அவலம் !

இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததுடன், வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஐந்து பேரை கைது செய்துள்ளனர். முதல் மனைவியை விட்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நபரை சிறுநீர் அருந்த சொல்லி கட்டயப்படுத்திய கிராமத்தினரின் செயல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories