இந்தியா

காரில் கூட்டு பாலியல் வன்கொடுமை.. தோழியை நம்பிய மாடலிங் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி!

தோழி என்று நம்பி அவருடன் பார்ட்டிக்கு சென்ற சக தோழியை தனது ஆண் நண்பர்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய துணை போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரில் கூட்டு பாலியல் வன்கொடுமை.. தோழியை நம்பிய மாடலிங் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தோழி என்று நம்பி அவருடன் பார்ட்டிக்கு சென்ற சக தோழியை தனது ஆண் நண்பர்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய துணை போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதுடைய இளம்பெண். மாடலிங் செய்து வரும் இவருக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த டிம்பிள் லம்பா என்ற பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், அவ்வப்போது இவர்கள் சேர்ந்து ஷாப்பிங், அவுட்டிங் என செல்வது வழக்கம்.

காரில் கூட்டு பாலியல் வன்கொடுமை.. தோழியை நம்பிய மாடலிங் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி!

அப்படி தான் சம்பவத்தன்றும் ராஜஸ்தான் தோழி, இவரை பார்ட்டி ஒன்றிற்கு அழைத்துள்ளார். இவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்க, இருவரும் சேர்ந்து கொச்சி எம்.ஜி சாலையில் உள்ள டான்ஸ் பாருக்கு சென்றுள்ளனர். அங்கே டிம்பிள் லம்பாவுக்கு தெரிந்த விவேக், சுதீப், நிதின் ஆகிய 3 நண்பர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கும் இந்த பெண்ணுக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்துள்ளது.

இந்த நிலையில், பாருக்கு சென்ற அவர்கள் அளவுக்கு அதிகமாக மது உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அனைவரும் முழு போதையில் இருந்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பிறகு போதை அளவுக்கு அதிகமானதால், கேரளா பெண்ணை, அவரது வீட்டிற்கு சென்று விடுவதாக கூறிய நண்பர்கள் ஒரு வாகனத்தில் பெண்ணை ஏற்றினர்.

காரில் கூட்டு பாலியல் வன்கொடுமை.. தோழியை நம்பிய மாடலிங் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி!

அந்த பெண் டிம்பிளை அழைத்தபோது, அவர் வர மறுத்துள்ளார். பிறகு இவர்கள் அனைவரும் வாகனத்தில் கிளம்பியுள்ளனர். ஆனால் வீட்டிற்கு செல்லாமல், அங்கே ஒரு சாலையை வாகனத்தில் சுற்றி சுற்றி வந்துள்ளனர். மேலும் ஓடும் வண்டியிலேயே கேரள பெண்ணை மூன்று பேரும் மாற்றி மாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

நீண்ட நேரத்திற்கு பிறகு மீண்டும் ஓட்டலுக்கு வந்த அவர்கள், அங்கிருந்த டிம்பிளை கூட்டிக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு சென்று அவரை இறக்கிவிட்டு இவர்கள் அனைவரும் வீடு திரும்பினர். மறுநாள் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நிலை மோசமாக காணப்பட்டதால் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காரில் கூட்டு பாலியல் வன்கொடுமை.. தோழியை நம்பிய மாடலிங் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி!

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், தனக்கு நேர்ந்தவை குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் வைஷாலி மற்றும் அவரது நண்பர்களை அழைத்து விசாரித்தனர். அப்போது இது முன்பே திட்டம் தீட்டி நடத்தப்பட்ட சம்பவம் என்று தெரியவந்தது. மேலும் இதற்கு டிம்பிளும் துணை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தப்படும்போது கைது செய்யப்பட்டவர்களின் முழு விபரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோழி என்று நம்பி அவருடன் பார்ட்டிக்கு சென்ற சக தோழியை தனது ஆண் நண்பர்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய துணை போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories