இந்தியா

கல்லூரி மாணவிக்கு முத்தம்.. ஜூனியரை கொடூரமாக ராகிங் செய்த சீனியர் மாணவ,மாணவியர்.. ஒடிசாவில் அதிர்ச்சி !

கல்லூரி மாணவி ஒருவரை சீனியர் மாணவர் ஒருவரின் தலைமையில் ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து ராக்கிங் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவிக்கு முத்தம்.. ஜூனியரை கொடூரமாக ராகிங் செய்த சீனியர் மாணவ,மாணவியர்.. ஒடிசாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கல்லூரிகளில் புதிதாக சேரும் மாணவர்களிடம் நட்பாக பழகவும், அவர்களை கல்லூரி வாழ்க்கைக்கு சகஜமாகவும் எப்போதோ ஆரம்பிக்கப்பட்டதுதான் ராகிங் கலாச்சாரம்.. ஆனால் தற்போது அதன் நோக்கமே சிதைக்கப்பட்டு புதிதாக சேரும் மாணவர்களை கொடுமை படுத்தும் நிகழ்வாக அது மாற்றப்பட்டுள்ளது.

சில மோசமான ராகிங் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவும் நிலைமை மோசமாகியுள்ளது. மேலும்,ராகிங்கை தடுக்க பள்ளி நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் சில கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் சில இடங்களில் அது தொடர்ந்து நடந்து வருகிறது.

கல்லூரி மாணவிக்கு முத்தம்.. ஜூனியரை கொடூரமாக ராகிங் செய்த சீனியர் மாணவ,மாணவியர்.. ஒடிசாவில் அதிர்ச்சி !

அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது ஒடிசா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ஒடிசா மாநிலம் பெர்காம்பூர் பகுதியில் பினாயக் ஆச்சார்யா கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவி ஒருவரை மோசமான வகையில் ராக்கிங் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக வெளிவந்த வீடியோவில் ஒரு மாணவியை சீனியர் மாணவர் ஒருவரின் தலைமையில் ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து ராக்கிங் செய்கின்றனர். ஐ லவ் யு சொல்ல வேண்டும் என்றும், மாணவிக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லி ஒரு ராக்கிங் செய்துள்ளனர். மேலும், அதனை மறுத்த நிலையில் பிளாஸ்டிக் பைப்பால் அடிப்பதாக மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவிக்கு முத்தம்.. ஜூனியரை கொடூரமாக ராகிங் செய்த சீனியர் மாணவ,மாணவியர்.. ஒடிசாவில் அதிர்ச்சி !

இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்மந்தப்பட்ட மாணவர்களை கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதைத் தொடர்ந்து இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்ட நிலையில், ராகிங்கில் ஈடுபட்டவர்களில் முக்கியமான சீனியர் மாணவனை போலிஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories