தமிழ்நாடு

முதலைமைச்சரே..-வா? என்னது இது எதோ புதுசா இருக்கே.. : BJP தொண்டர்களின் தமிழறிவை மெய்ச்சும் இணையவாசிகள் !

அண்ணாமலையை வரவேற்று, வைக்கப்பட்ட ஒரு பிளக்ஸ் பேனரில், ‘வருங்கால முதலைமைச்ரே’ என எழுத்துப் பிழையுடன் காணப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதலைமைச்சரே..-வா? என்னது இது எதோ புதுசா இருக்கே.. : BJP தொண்டர்களின் தமிழறிவை மெய்ச்சும் இணையவாசிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மத்தியில் பாஜக ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றி வருகிறது. இதில் தேர்தலில் வென்று ஆட்சியமைத்ததை விட எம்.எல்.ஏக்களை வாங்கி ஆட்சி அமைந்ததுதான் அதிகம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

ஆனால், அத்தகைய பாஜகவால் சீண்ட முடியாத மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான். தமிழிசை வரை தற்போது அண்ணாமலை வரை பாஜக தமிழ்நாட்டில் தலைகீழாக நின்றாலும் கூட முன்னேற் முடியாமல் தவித்த வருகிறது. அதோடு கட்சியை வளர்க்க ரவுடிகள் முதற்கொண்டு கட்சியில் பாஜக சேர்த்து வருகிறது.

முதலைமைச்சரே..-வா? என்னது இது எதோ புதுசா இருக்கே.. : BJP தொண்டர்களின் தமிழறிவை மெய்ச்சும் இணையவாசிகள் !

மேலும், அதன் தலைவர்கள் முதல் தொண்டர் வரை செய்யும் ஒவ்வொடு செயலும் மீம்ஸ் கண்டெண்டாக மாறி இணையத்தில் வளம் வருகிறது. அப்படி ஒரு சம்பவம் பாஜக தலைவர் அண்ணாமலையை வைத்து மதுரையில் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே சாணார்பட்டி கிராமத்துக்கு கடந்த 8ம் தேதி தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வருகை தந்துள்ளார். அப்போது அங்கு ஒரு பாஜக நிர்வாகி ஒருவரின் வீட்டில் அண்ணாமலை மதிய உணவு சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முதலைமைச்சரே..-வா? என்னது இது எதோ புதுசா இருக்கே.. : BJP தொண்டர்களின் தமிழறிவை மெய்ச்சும் இணையவாசிகள் !

இதற்காக அப்பகுதியில் அண்ணாமலையை வரவேற்று, பிரமாண்ட பிளக்ஸ் பேனர்களை பாஜவினர் வைத்திருந்தனர். அதில் ஒரு பிளக்ஸ் பேனரில், ‘வருங்கால முதலைமைச்ரே’ என எழுத்துப் பிழையுடன் காணப்பட்டது. இதனை படம்பிடித்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதை இணையத்தில் பதிவிட்டனர். அதனைத் தொடர்ந்து அது இணையத்தில் வைரலாகியுள்ளது. பலரும் பாஜக தொண்டர்களை விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories