இந்தியா

மீண்டும் ஒரு ஜாலியன்வாலாபாக் போராடிய பெண்களை கொடூரமாகத் தாக்கிய உ.பி- போலிஸ்: அதிர்ச்சி வீடியோ!

உத்தர பிரதேசத்தில் போராட்டம் நடத்திய பெண்களை போலிஸார் லத்தியால் கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஒரு ஜாலியன்வாலாபாக்  போராடிய பெண்களை  கொடூரமாகத் தாக்கிய உ.பி- போலிஸ்: அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் தொடர்ச்சியாகப் பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

இந்நிலையில் போராட்டம் நடத்திய பெண்களை போலிஸாரே லத்தியால் கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஒரு ஜாலியன்வாலாபாக்  போராடிய பெண்களை  கொடூரமாகத் தாக்கிய உ.பி- போலிஸ்: அதிர்ச்சி வீடியோ!

உத்தர பிரதேச மாநிலம், ஜலால்பூர் பகுதியில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலையை மர்ம நபர்கள் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து பெண்கள் சில போராட்டம் நடத்தினர்.

அப்போது போலிஸாருக்கும், போராட்டம் நடத்திய பெண்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலிஸார் பெண்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக அவர்களை லத்தியால் அடித்து விரட்டியுள்ளனர்.

இதில் போலிஸாரின் தாக்குதலையும் எதிர்த்து நின்று சில பெண்கள் போராட்டம் நடத்தினர். மேலும் போலிஸார் தாக்குதலில் பல பெண்கள் காயமடைந்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த பலரும் சுதந்திரப் போராட்டத்தின் போது போராடிய மக்கள் மீது கொடூரமாகத் தாக்கி கொலை செய்த ஆங்கிலேயர்களின் ஜாலியன்வாலாபாக் சம்பவத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது, பெண்கள் மீது போலிஸார் நடத்திய தாக்குதல் என வேதனையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories