இந்தியா

நாய்க்கு உணவு கொடுக்காததால் ஆத்திரம்.. உறவினரை அடித்து கொலை செய்த இளைஞர்: கேரளாவில் அதிர்ச்சி!

கேரளாவில் வளர்ப்பு நாய்க்கு உணவு அளிக்காததால் உறவினரை இளைஞர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாய்க்கு உணவு கொடுக்காததால் ஆத்திரம்..  உறவினரை அடித்து கொலை செய்த இளைஞர்: கேரளாவில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் முளையன்காவு பகுதியைச் சேர்ந்தவர் ஹக்கீம். அவர் தனது வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். மேலும் ஹர்ஷத் என்ற உறவினர் இவரது வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், ஹர்ஷத், நாய்க்கு உணவு வழங்காமல் இருந்துள்ளார். இது அறிந்த ஹிக்கீம் தனது உறவினர் என்றும் பாராமல் அவரை மரக்கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

நாய்க்கு உணவு கொடுக்காததால் ஆத்திரம்..  உறவினரை அடித்து கொலை செய்த இளைஞர்: கேரளாவில் அதிர்ச்சி!

இந்த தாக்குதலில் ஹர்ஷத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அங்குச் சிகிச்சை பலனின்றி ஹர்ஷத் உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த ஹர்ஷத் உடலில் பலத்த காயம் இருந்ததாக உடல்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாய்க்கு உணவு கொடுக்காததால் ஆத்திரம்..  உறவினரை அடித்து கொலை செய்த இளைஞர்: கேரளாவில் அதிர்ச்சி!

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஹக்கீமை கைது செய்துள்ளனர். மேலும் தாக்குதலில் ஹர்ஷத் விலா எலும்பு முறிந்து இரத்தபோக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்களும் போலிஸாரும் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories