இந்தியா

முன்னாள் உளவுத்துறை அதிகாரி மரணத்தில் திடீர் திருப்பம்.. வெளியான அதிர்ச்சி CCTV காட்சி!

கர்நாடகாவில் முன்னாள் உளவுத்துறை அதிகாரி மர்ம மரணத்தில் திடீர் திருப்பமாக அவர் மீது கார் மோதும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

முன்னாள் உளவுத்துறை அதிகாரி மரணத்தில் திடீர் திருப்பம்.. வெளியான அதிர்ச்சி CCTV காட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகாக மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆர்.என். குல்கர்னி. இவர் 1963ம் ஆண்டு உளவுத்துறை பணியில் சேர்ந்துள்ளார். பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று உளவுத்துறையின் முக்கிய உயர் அதிகாரியாகவும் இருந்துள்ளார். மேலும் ஒன்றிய அரசின் உளவுத்துறையிலும் இவர் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

இதையடுத்து ஆர்.என்.குல்கர்னி 23 ஆண்டுகளுக்கு முன்பே பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் வழக்கம் போல் தனது வீட்டிலிருந்து கடந்த வெள்ளியன்று நடைப்பயிற்சி சென்றுள்ளார்.

முன்னாள் உளவுத்துறை அதிகாரி மரணத்தில் திடீர் திருப்பம்.. வெளியான அதிர்ச்சி CCTV காட்சி!

அப்போது அவரை அடையாளம் தெரியாத கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவரை மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், எம்.ஆர்.குல்கர்னி மீது திட்டமிட்டே கார் ஏற்றி கொலை செய்யும் சி.சி.டி. காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில், எம்.ஆர். கல்கர்னி சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது எதிரே வரும் கார் ஒன்று வேண்டும் என்றே அவர் மீது மோதிவிட்டுச் செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது.

இதையடுத்து போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விதிகளை மீறி கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்ட பக்கத்து வீட்டாரிடம் கேள்வி எழுப்பியதால் கொலை நடந்துள்ளது தெரியtந்தது.

முன்னாள் உளவுத்துறை அதிகாரியான ஆர்.என்.குல்கர்னியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் மாதப்பா. இவர் சட்டவிரோதமாகக் கட்டடம் கட்டி வந்துள்ளார். இதை அறிந்த ஆர்.என்.குல்கர்னி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து கட்டுமான பணிக்குத் தடை வாங்கியுள்ளார் என ஆர்.என்.குல்கர்னியின் மருமகன் சஞ்சயா அங்காடி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலிஸார் சந்தேகத்தின் பேரில் மாதப்பாவிடனும் விசாரணை நடத்தியுள்ளார். இருப்பினும் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஆர்.என்.குல்கர்னி கொலை குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories