இந்தியா

மரியாதையை காப்பாற்ற 29 ஆயிரம் தண்டம்.. ஆபாச படம் பார்த்த 83 வயது முதியவருக்கு நேர்ந்த சோகம் !

ஆபாச படம் பார்த்த 83 வயது முதியவரிடம் ஒரு கும்பல் ரூ.29 ஆயிரம் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரியாதையை காப்பாற்ற 29 ஆயிரம் தண்டம்.. ஆபாச படம் பார்த்த 83 வயது முதியவருக்கு நேர்ந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மும்பையை சேர்ந்த 83 வயது முதியவர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்யும் தொழிலதிபராக இருந்து வருகிறார். இவர் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி ஆபாசப்படம் ஒன்றினை பார்க்க அது தொடர்பான இணையதளத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது திடிரென அவருக்கு காவல்துறையில் இருந்து அனுப்பியது போல ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் ஆபாச படம் பார்ப்பது இந்தியாவில் சட்டவிரோதம் என்றும், இதனால் அபராதமாக 5 லட்ச ரூபாய் வரைகட்டவேண்டும் என்றும் அதில் இருந்துள்ளது. மேலும், அபராதத்தை கட்டத் தவறினால் கைது நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அதில் இருந்துள்ளது.

மரியாதையை காப்பாற்ற 29 ஆயிரம் தண்டம்.. ஆபாச படம் பார்த்த 83 வயது முதியவருக்கு நேர்ந்த சோகம் !

மேலும், தற்போது நீங்கள் ரூ.29 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த தொழிலதிபர் அந்த மெசேஜ்ஜில் இருந்த வங்கிக்கணக்குக்கு ஆன்லைனில் ரூ.32 ஆயிரத்தை அனுப்பியுள்ளார்.

பின்னர் தனது வங்கிக் கணக்கை சோதனை செய்தபோது தான் அனுப்பிய தொகை காவல்துறைக்கு செல்லவில்லை என்றும் யாரோ தன்னை ஏமாற்றியதையும் உணர்ந்துள்ளது. அதோடு இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். முதியவரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிஸார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories