இந்தியா

நள்ளிரவில் தீ பிடித்த விமானம்.. அலறியடித்த பயணிகள்: அவசர அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்!

டெல்லியிலிருந்து சென்ற இண்டிகோ விமானம் திடீரென தீ பிடித்ததால் அவசரமாக உடனே தரையிறக்கப்பட்டது.

நள்ளிரவில் தீ பிடித்த விமானம்.. அலறியடித்த பயணிகள்: அவசர அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி விமான நிலையத்திலிருந்து பெங்களூருவுக்கு நேற்று இரவு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். இதையடுத்து விமானம் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே வலது எஞ்சினில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதைக் கண்ட விமான உடனே விமானத்தை மீண்டும் டெல்லியிலேயே அவசர அவசரமாக தரையிறக்கினார்.

பின்னர் விமான நிலையத்தில் தயாராக இருந்துமீட்பு குழுவினர் பயணிகளைப் பத்திரமாக வெளியேற்றினர். மேலும் தீயையும் அணைத்து பெரிய விபத்துகள் எதுவும் ஏற்படாமல் உடனே தடுத்தனர். விமானம் உடனே தரையிறங்கியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் தீ பிடித்த விமானம்.. அலறியடித்த பயணிகள்: அவசர அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்!

இந்த விபத்து குறித்து இண்டிகோ விமானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்ப கேராளறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

இண்டிகோ விமானம் தொடர்ச்சியாகப் பயணிகளை அவமதித்து சர்ச்சையில் சிக்கி வந்த நிலையில் தற்போது விபத்தில் சிக்கியுள்ளது விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories