இந்தியா

காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்.. இளம்பெண்ணுக்கு இளைஞர் செய்த கொடூரம்.. கேரளாவில் அதிர்ச்சி !

தனது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரப்பட்ட இளைஞர் ஒருவர் காதலியின் கழுத்தை அறுத்து கொன்றுள்ள சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்.. இளம்பெண்ணுக்கு இளைஞர் செய்த கொடூரம்.. கேரளாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை அடுத்துள்ள பானூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரியா (வயது 23). இவர் அந்த பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவ ஆய்வகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரை வேறொரு பகுதியை சேர்ந்த ஷியாம்ஜித் (வயது 25) ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று விஷ்ணுபிரியாவின் தந்தை வினோத்தின் நண்பர் ஒருவர் இறந்துவிட்டதால், பிரியாவின் தாயும் தந்தையும், இவரை வீட்டில் தனியே விட்டு அங்கே சென்றுள்ளனர். அப்போது வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்துகொண்ட ஷ்யாம்ஜித், பிரியாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கே அவரிடம் தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்.. இளம்பெண்ணுக்கு இளைஞர் செய்த கொடூரம்.. கேரளாவில் அதிர்ச்சி !

ஏற்கனவே பிரியாவிடம் காதலை கூறி, அவர் ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கே வந்து கூறியுள்ளார். அப்போதும் பிரியா அவரது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் வீட்டை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். அதோடு காதலை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஷியாம்ஜித், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து தனது காதலி விஷ்ணுபிரியாவின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டார். கழுத்தறுபட்ட பிரியா சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க இறந்தார்.

காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்.. இளம்பெண்ணுக்கு இளைஞர் செய்த கொடூரம்.. கேரளாவில் அதிர்ச்சி !

பின்னர் வெளியே சென்றிருந்த பெற்றோர் திரும்பி வந்து பார்க்கையில், பிரியா கழுத்தறுபட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் அதிகாரிகள் பிரியாவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு அனுப்பினர்.

மேலும் பிரியாவின் மொபைல் எண்ணை சோதனை செய்தபோது, அதில் ஷியாம்ஜித்தின் நம்பர் இருந்துள்ளது பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், தனது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories