இந்தியா

உ.பி-யை உலுக்கிய கூட்டு பாலியல் வன்கொடுமை.. பெண் கொடுத்த புகாரால் பெண்ணுக்கே நேர்ந்த கதி..!

தன்னை கடத்திய கும்பல் 2 நாட்கள் வைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பெண் ஒருவர் பொய்யான புகார் அளித்துள்ளது டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி-யை உலுக்கிய கூட்டு பாலியல் வன்கொடுமை.. பெண் கொடுத்த புகாரால் பெண்ணுக்கே நேர்ந்த கதி..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தன்னை கடத்திய கும்பல் 2 நாட்கள் வைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பெண் ஒருவர் பொய்யான புகார் அளித்துள்ளது டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவர் உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்திற்கு தனது சகோதரர் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மீண்டும் டெல்லி புறப்பட கடந்த 16-ம் தேதி ஆட்டோவிற்காக காத்திருந்தார். அப்போது திடீரென்று காரில் வந்த கும்பல் அந்த பெண்ணை கடத்தி சென்றுள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் சகோதரன் இது குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருக்கும்போது, கடந்த 18-ம் தேதி சாலையோரத்தில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒரு மயக்க நிலையில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், மயக்க நிலையில் கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உ.பி-யை உலுக்கிய கூட்டு பாலியல் வன்கொடுமை.. பெண் கொடுத்த புகாரால் பெண்ணுக்கே நேர்ந்த கதி..!

பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்த பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று 2 நாள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தாங்கள் குற்றம் செய்யவில்லை என்று கூறினர்.

இதனிடையே பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது தான் அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான காயங்கள், அடையாளங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் நடந்த நாளன்று அவரது செல்போன் சிக்னலை வைத்து அவர் எங்கிருந்தார் என்பது தெரியவந்தது.

உ.பி-யை உலுக்கிய கூட்டு பாலியல் வன்கொடுமை.. பெண் கொடுத்த புகாரால் பெண்ணுக்கே நேர்ந்த கதி..!

பின்னர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தன்னை அந்த மூவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்றும் கூறினார். அதோடு, தான் குற்றம்சாட்டிய மூன்று பேருடன் தங்களுக்கு நில பிரச்னை இருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.53 லட்சமாகும் என்றும் கூறினார்.

மேலும் அவர்களை சிக்கவைக்கவே எனது கூட்டாளிகளுடன் இதுபோன்ற ஒரு திட்டத்தை தீட்டியதாகவும் கூறினார். இதையடுத்து அந்த பெண் உட்பட 4 பேரை கைது செய்த கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தன்னை கடத்தி 2 நாட்கள் வைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பெண் ஒருவர் பொய்யான புகார் அளித்துள்ளது டெல்லி வட்டாரத்தில் மட்டுமின்றி நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories