இந்தியா

கேரளா :OTT படத்தில் வாய்ப்பு என ஆபாச படத்தில் நடிக்க வைத்த கும்பல்.. இளம்நடிகர், நடிகை பரபரப்பு புகார்!

ஆங்கிலத்தில் ஒப்பந்தத்தை போட்டு அதன் மூலம் மிரட்டி இளம்நடிகர், நடிகையை ஆபாச படத்தில் நடிக்கவைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா :OTT படத்தில் வாய்ப்பு என ஆபாச படத்தில் நடிக்க வைத்த கும்பல்.. இளம்நடிகர், நடிகை பரபரப்பு புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பெங்களூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளம் நடிகர் ஒருவர் வெப் சீரிசில் நாயகனாக நடிக்க ஆட்கள் தேவை என விளம்பரத்தை பார்த்து அதற்கு விண்ணப்பித்துள்ளார். அதன்படி அவரை அழைத்த படக்குழுவினர் திருவனந்தபுரம் அருகே ஒரு இடத்தில் படப்பிடிப்பு நடப்பதாகவும் அங்கு வருமாறும் கூறியுள்ளனர்.

அதன்படி அங்கு வந்த இளைஞரிடம் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒப்பந்தத்தை நீட்டி அதில் கையெழுத்திட வைத்துள்ளனர். அதன்படி அந்த இளைஞரும் அதை சரியாக படிக்காமல் கையெழுத்திட்டுள்ளார். பின்னர் தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

கேரளா :OTT படத்தில் வாய்ப்பு என ஆபாச படத்தில் நடிக்க வைத்த கும்பல்.. இளம்நடிகர், நடிகை பரபரப்பு புகார்!

அது ஆபாச படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தம் எனவும் படத்தில் நடிக்க மறுத்தால் 5 லட்சம் தர வேண்டும் என்பதும் பின்னர்தான் அவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வேறு வழியின்றி அந்த படத்தில் நடித்துள்ளார். அதன் பின்னர் இந்த படம் ஓடிடி தளத்தில் தீபாவளியன்று வெளியாக இருப்பதாக விளம்பரம் வெளியான நிலையில் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து கேரள முதல்வருக்கும் திருவனந்தபுரம் கமிஷனருக்கும் இது தொடர்பாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த நிலையில், அதே நிறுவனத்தால் ஒரு இளம் நடிகை ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளது மற்றொரு புகாரின் மூலம் தெரியவந்துள்ளது. அந்த இளைஞர் பாணியில் அந்த இளம்நடிகையும் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்ட நிலையில், அவருக்கும் இதேபோல ஆங்கிலத்தில் ஒப்பந்தத்தை போட்டு அதன் மூலம் மிரட்டி ஆபாச படத்தில் நடிக்கவைத்துள்ளனர். இந்த சம்பவம் கேரளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories