இந்தியா

Buy one get one ஆஃபரால் ரூ. 8 லட்சத்தை இழந்த 51 வயது பெண்.. உணவு பிரியர்கள் அதிர்ச்சி!

மும்பையில் பேஸ்புக் மூலம் ரூ.200க்கு Buy one get one ஆஃபரில் உணவு வாங்க ஆசைப்பட்டு 51 வயது பெண் ஒருவர் ரூ 8.46 லட்சம் இழந்த சம்பவம் பெரும் ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Buy one get one ஆஃபரால் ரூ. 8 லட்சத்தை இழந்த 51 வயது பெண்.. உணவு பிரியர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தொழில்நுட்பங்கள் வளருவதற்கு ஏற்ப மோசடி பேர்வழிகளும் தங்களை மேம்படுத்திக் கொண்டு பொதுமக்களை ஏமாற்றி நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். முதலில் வங்கியில் இருந்து பேசுவதுபோல ஆதார் கார்டு, பான் கார்டு எண்ணைப் பெற்று பணத்தைத் திருடி வந்தனர். பிறகு எஸ்.எம்.எஸ் மூலம் உங்களுக்கு கிப்ட் கிடைத்துள்ளது. இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள் என கூறி பணங்களை அபேஸ் செய்தனர்.

Buy one get one ஆஃபரால் ரூ. 8 லட்சத்தை இழந்த 51 வயது பெண்.. உணவு பிரியர்கள் அதிர்ச்சி!

தற்போது வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி மர்ம நபர்கள் பொதுமக்களின் ஆசைகளை முதலீடாகக் கொண்டு தங்கள் வேலையை காட்டி வருகின்றனர். இவர்களிடம் சாமானிய மக்கள் முதல் நடிகர்கள், எஸ்.பி.எஸ் அதிகாரிகள் என பலரும் ஏமாந்து உள்ளனர்.

இந்த Cyber குற்றங்கள் குறித்து போலிஸார் தொடர்ச்சியாகப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் கவனத்துடன் இல்லாததால் இப்படியான Cyber குற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

Buy one get one ஆஃபரால் ரூ. 8 லட்சத்தை இழந்த 51 வயது பெண்.. உணவு பிரியர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில், பேஸ்புக் மூலம் ரூ.200க்கு Buy one get one ஆஃபரில் உணவு வாங்க ஆசைப்பட்டு 51 வயது பெண் ஒருவர் ரூ 8.46 லட்சம் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை பாந்த்ரா பகுதியைச் சேர்ந்தவர் நித்யா. இவர் பேஸ்புக்கில் Buy one get one ஆஃபரில் உணவு விளம்பரம் ஒன்றைப் பார்த்துள்ளார். இதில் மகாராஜா தாலி சாப்பாடு வெறும் ரூ,200க்கு Buy one get one ஆஃபரில் கொடுக்கப்படும் என இருந்துள்ளது.

இதையடுத்து நித்யா அந்த விளம்பர லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்துள்ளார். அப்போது ரூ.200 செலுத்துவதற்காக வங்கி விவரங்களையும் பூர்த்தி செய்துள்ளார். பிறகு அடுத்து ஏ.டி.எம் கார்டு விபரங்கள் கொடுத்துள்ளார். இதையடுத்து Zoho Assist என்ற ஆப்பை பதிவிறக்க வேண்டும் எனவும் அந்த லிங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Buy one get one ஆஃபரால் ரூ. 8 லட்சத்தை இழந்த 51 வயது பெண்.. உணவு பிரியர்கள் அதிர்ச்சி!

பிறகு உணவு மீதான ஆசையில் Zoho Assist என்ற ஆப்பையும் பதிவிறக்கம் செய்துள்ளார். ஆனால் அவர் ஆர்டர் செய்த உணவு வரவே இல்லை. இதற்கு பதில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.8.46 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் எடுத்துள்ளனர். இது பற்றி அறிந்த நித்யா அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் இது குறித்து போலிஸாரிடம் புகார் கொடத்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேஸ்புக் மூலம் ரூ.200க்கு Buy one get one ஆஃபரில் உணவு வாங்க ஆசைப்பட்டு 51 வயது பெண் ஒருவர் ரூ 8.46 லட்சம் இழந்த சம்பவம் பெரும் ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories