இந்தியா

500.மீ தூரம் ரோட்டில் இழுத்துச்செல்லப்பட்ட மாணவி.. பாலியல் சீண்டலை எதிர்த்ததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் மனைவியை ஆட்டோவில் தரதரவென்று இழுத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

500.மீ தூரம் ரோட்டில் இழுத்துச்செல்லப்பட்ட மாணவி.. பாலியல் சீண்டலை எதிர்த்ததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் தானேவை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி செல்வதற்காக ஆட்டோவில் பயணித்துள்ளார். அப்போது அந்த ஆட்டோ ஓட்டுநருக்கும் அந்த மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த மாணவி ஆட்டோவில் இருந்து இறங்கியுள்ளார். மாணவி இறங்கும் நேரத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை எடுத்ததால் அந்த மாணவி கிட்டதட்ட 500 மீட்டர் தூரம் ஆட்டோவை பிடித்தவாறே தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

500.மீ தூரம் ரோட்டில் இழுத்துச்செல்லப்பட்ட மாணவி.. பாலியல் சீண்டலை எதிர்த்ததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

இதில் பலத்த காயமடைந்த அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்/ இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில் இது மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது ஆட்டோவில் எரிய மாணவியிடம் ஆட்டோ ஓட்டுநர் கையை பிடித்து இழுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த மாணவி ஆட்டோவில் இருந்து இறங்கவேண்டுமாறு கூறியுள்ளார்.

இதனை ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை நிறுத்திய நிலையில், மாணவி இறஙம்போது மீண்டும் ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை இயக்கியுள்ளார். இதில் மாணவி இழுத்துச்செல்லப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தலைமறைவான அந்த ஆட்டோ ஓட்டுநரை போலிஸார் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories