இந்தியா

சார்ஜ் ஏற்றும் போது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வெடித்து சிதறிய பேட்டரி - 7 வயது சிறுவன் பரிதாப பலி!

மும்பையில் மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து சிதறியதில் 7 வயது சிறுவன் பரிதாப பலியான சம்பவம் குறித்து மும்பை வசாய் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ஜ் ஏற்றும் போது எலக்ட்ரிக்
ஸ்கூட்டரில் வெடித்து சிதறிய பேட்டரி - 7 வயது சிறுவன் பரிதாப பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வெளிநாடுகளை போன்று இந்தியாவிலும் அண்மைக்காலங்களாக மின்சார வாகனத்தின் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. அதற்கு முழுமுதற் காரணமாக பெட்ரோல், டீசலின் விலையேற்றத்தை குறிப்பிடுகின்றனர். மக்களின் தேவையை உணர்ந்த நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கின.

பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் பைக்கை தயாரித்து வரும் நிலையில், அந்த வாகனங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், தீவிபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த மாதம் கூட, வேலூரில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் திடீரென வெடித்ததால் தந்தையும், மகளும் சம்பவ இடத்திலேயே கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் பல்வேறு பகுதியில் வாகன ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரித்த சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், மும்பையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து சிதரியதில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்ஜ் ஏற்றும் போது எலக்ட்ரிக்
ஸ்கூட்டரில் வெடித்து சிதறிய பேட்டரி - 7 வயது சிறுவன் பரிதாப பலி!

மும்பை வசாய் பகுதியைச் சேர்ந்தவர் சர்பாய் அன்சாரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாங்கிய எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வீட்டில் ஜார்ச் செய்து பயன்படுத்தி வந்துள்ளார். அந்தவகையில், நேற்று இரவு மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் செய்து இருக்கிறார்.

அப்போது அதிகாலை 5.30 மணிக்கு பயங்கர சத்தத்துடன் மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து சிதறியது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 7 வயது மகன் ஷபீருக்கு பலத்த ஏற்பட்டுள்ளது. அவருடன் தூங்க்கொண்டிருந்த பாட்டிக்கு தீகாயம் ஏற்பட்டுள்ளது.

அக்கம்பக்கத்தினர் மற்றும் சர்பாய் அன்சாரி ஆகியோர் குழந்தை மற்றும் பாட்டியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 80% தீ காயத்துடன் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories