இந்தியா

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுவன்.. இரும்பு கம்பியால் தாக்கிய கொடூரம்.. டெல்லியில் பயங்கரம் !

டெல்லியில் 12 வயது சிறுவன் 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இரும்பு கம்பியால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுவன்.. இரும்பு கம்பியால் தாக்கிய கொடூரம்.. டெல்லியில் பயங்கரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமைகள் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அதிலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்தே காணப்படுகிறது. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை இந்தியாவை உலுக்கியது.

அதன்பின்னர் இந்தியாவில் பல சிறுமிகள் கூட்டு பாலியல் வ்நகடுமை செய்யப்பட்டுள்ளது குறித்து பல புகார்கள் நாளுக்கு நாள் குவிந்து வருகிறது. மேலும் அண்மையில் கூட பா.ஜ.க ஆளும் மாநிலமான உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு நடு ரோட்டில் நிர்வாணமாக நடந்து வந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுவன்.. இரும்பு கம்பியால் தாக்கிய கொடூரம்.. டெல்லியில் பயங்கரம் !

இந்த நிலையில் தற்போது தலைநகர் டெல்லியில் 12 வயது சிறுவன் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, அவரை கொலை செய்ய முயன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் "தலைநகர் டெல்லியில் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பில்லை. 12 வயது சிறுவன் 4 பேரால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டுள்ளார்.

சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து மகளிர் ஆணையம் சார்பில் டெல்லி காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தற்போது குற்றவாளிகள் 4 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகியிருக்கும் மீதியுள்ள மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories