இந்தியா

ஓட்டலில் வேறு ஒரு பெண்ணுடன் தனியாக இருந்த கணவன்.. கையும் களவுமாகப் பிடித்த மனைவி செய்த பகீர் காரியம்!

வேறு ஒரு பெண்ணுடன் ஓட்டலில் தனியாக இருந்த கணவனை கையும் களவுமாகப் பிடித்து மனைவி தாக்கிய சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

ஓட்டலில் வேறு ஒரு பெண்ணுடன்  தனியாக இருந்த கணவன்.. கையும் களவுமாகப் பிடித்த மனைவி செய்த பகீர் காரியம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் கோபால். இவரது மனைவி நீலம். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் தினேஷ் கோபாலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது. இதையடுத்து அவர் டெல்லியில் ஓட்டல் ஒன்றில் அறை அடுத்து அந்த பெண்ணுடன் தனியாக இருந்துள்ளார்.

ஓட்டலில் வேறு ஒரு பெண்ணுடன்  தனியாக இருந்த கணவன்.. கையும் களவுமாகப் பிடித்த மனைவி செய்த பகீர் காரியம்!

இது பற்றி அவரது மனைவி நீலத்திற்குத் தகவல் தெரிந்துள்ளது. உடனே அவர் தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அறையில் கணவனும் அந்த பெண்ணும் தனியாக இருந்ததைப் பார்த்து அவர் ஆவேசமடைந்துள்ளார்.

உடனே தனது செருப்பைக் கழற்றி கணவரைச் சரமாரியாகக் தாக்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே அவரை தடுத்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் கணவருக்கும் நீலம் போன் செய்து இது பற்றித் தெரிவித்துள்ளார்.

ஓட்டலில் வேறு ஒரு பெண்ணுடன்  தனியாக இருந்த கணவன்.. கையும் களவுமாகப் பிடித்த மனைவி செய்த பகீர் காரியம்!

இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் மூன்று பேரையும் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories